எம்.ஜி.ஆர், லதா நடித்து 1974ம் ஆண்டு வெளியானபடம், ‘சிரித்து வாழ வேண்டும்’. ‘ஜஞ்சீர்’ என்ற இந்திப்படத்தின் ரீமேக் இது. இந்தப்படம் டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும் வெளியாக இருக்கிறது. இதன் புதிய டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்நடந்தது. சைதை துரைசாமி,சரத்குமார், நடிகை லதா,ஆனந்தா எல் சுரேஷ், சித்ராலட்சுமணன், பிரமிட் நடராஜன்,சொக்கலிங்கம், மயில்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நடிகை லதா பேசும்போது, “இந்தப் படத்தில் இடம்பெறும் ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’ பாடல், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காகத்தான் பதிவு செய்யப்பட்டது. அதில் நடித்த நான், மஞ்சுளா, சந்திரகலா எல்லோரும் ‘இந்தப்பாட்டு யாருக்கு வரும்?’ என்று கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால், அதில் இடம்பெறாமல், ‘சிரித்துவாழ வேண்டும்’ மூலமாக எனக்கே அந்தப் பாடல் வந்துவிட்டது. எத்தனை கதாநாயகர்கள் வந்தாலும் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணை யாருமே இல்லை” என்றார்.
எம்.ஜி.ஆர், லதா நடித்து 1974ம் ஆண்டு வெளியானபடம், ‘சிரித்து வாழ வேண்டும்’. ‘ஜஞ்சீர்’ என்ற இந்திப்படத்தின் ரீமேக் இது. இந்தப்படம் டிஜிட்டல் வடிவத்தில் மீண்டும் வெளியாக இருக்கிறது.