ப்ரூசல்ஸ்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மொரோக்கோ அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது பெல்ஜியம் அணி. இதனையடுத்து பெல்ஜிய தலைநகர் ப்ரூசல்ஸில் நடந்த கலவரத்தில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பெல்ஜியத்தை வென்று அதிர்ச்சி கொடுத்துள்ளது மொராக்கோ அணி. குரூப் சுற்றுப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் பெல்ஜியம் தலைநகர் ப்ருசல்ஸில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது கார், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சிலர் தீ வைத்தனர். இதனையடுத்து கலவரத் தடுப்பு போலீஸார் விரைந்து வந்து போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த கலவரத்தில் ஒரு பத்திரிகையாளர் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மொரோக்கோ அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது பெல்ஜியம் அணி. இதனையடுத்து பெல்ஜிய தலைநகர் ப்ரூசல்ஸில் நடந்த கலவரத்தில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.