ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘வரலாறு முக்கியம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘காஃபி வித் காதல்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகும் படம் ‘வரலாறு முக்கியம்’. சூப்பர் குட் ஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படத்தை சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ளார். மலையாள படங்களுக்கு இசையமைத்த ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில்,கே.எஸ்.ரவிக்குமார், காஷ்மீர் பர்தேஷி, பிரக்யா நாகரா, விஜி ரத்தீஷ், விடிவி கணேஷ், சித்திக், ஷாரா, ராமதாஸ், லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜீவா நடிப்பில் ‘வரலாறு முக்கியம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.