பாட்னா: பிஹார் மாநிலத்தில் ஒரு செல்போன் டவரை முழுவதுமாக திருடிக் கொண்டு சென்றுள்ளனர் கொள்ளையர்கள். டெலிகாம் நிறுவன ஊழியர்கள் போல நடித்து அதனை முழுவதுமாக கழட்டி, லாரியில் ஏற்றிக் கொண்டு அவர்கள் சென்றுள்ளனர். இந்த செல்போன் டவரின் மதிப்பு சுமார் 19 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பாட்னாவில் உள்ள கர்ட்னிபாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றுள்ளது. கொள்ளையர்கள் சம்பவ இடத்தில் டவரை கழட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த டவர் அமைக்கப்பட்டிருந்த இடத்தின் உரிமையாளர் அது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது தங்களை டெலிகாம் நிறுவன ஊழியர்கள் என பொய் சொல்லி உள்ளனர் கொள்ளையர்கள். மேலும், ஒப்பந்த காலம் முடிந்த காலத்தால் எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அதை லாரி மூலம் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.
பிஹார் மாநிலத்தில் ஒரு செல்போன் டவரை முழுவதுமாக திருடிக் கொண்டு சென்றுள்ளனர் கொள்ளையர்கள். டெலிகாம் நிறுவன ஊழியர்கள் போல நடித்து அதனை முழுவதுமாக கழட்டி, லாரியில் ஏற்றிக் கொண்டு அவர்கள் சென்றுள்ளனர். இந்த செல்போன் டவரின் மதிப்பு சுமார் 19 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.