மும்பை: திருமணத்திற்குப் பிறகு திரையில் காணாமல் போன புகழ்பெற்ற நடிகைகள் சிலர் குறித்து தற்போது பார்ப்போம்.
நம்ரதா ஷிரோத்கர்: 1993ல் மிஸ் பெமினாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆண்டுகளில் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர் நம்ரதா ஷிரோத்கர். அடியெடுத்துவைத்த வேகத்திலேயே இந்தி, பெங்காலி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என வலம் வரத் தொடங்கினார். வம்சி எனும் தெலுங்கு படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்தார் நம்ரதா ஷிரோத்கர். அந்த ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்தது. இதையடுத்து திரைத்துறையிலிருந்து பிரியா விடைபெற்றார் நம்ரதா ஷிரோத்கர்.
திருமணத்திற்குப் பிறகு திரையில் காணாமல் போன புகழ்பெற்ற நடிகைகள் சிலர் குறித்து தற்போது பார்ப்போம்.