Home இன்றைய செய்தி சீர்காழி மக்களுக்கு அரசின் ரூ.1000 நிவாரணத் தொகை போதுமானதல்ல: ஜி.கே.வாசன்

சீர்காழி மக்களுக்கு அரசின் ரூ.1000 நிவாரணத் தொகை போதுமானதல்ல: ஜி.கே.வாசன்

3
0

சென்னை: "அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதி மக்களுக்கு போதுமானது அல்ல. அவர்களுக்கு ரூ.3000-லிருந்து ரூ.5000 வரை கொடுக்க வேண்டும்" என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசியது: "மயிலாடுதுறையில் நேற்று நான் சென்று பார்த்தபோதுகூட, பயிர்கள் எல்லாம் அழிந்து நாசமாகியிருந்ததை காணமுடிந்தது. மூன்று போகமெல்லாம் மறந்து, ஒரு போகத்துக்கே விவசாயிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், ஆயிரம் ரூபாயை 10 நாட்களுக்குப் பிறகு, அரசு வழங்கியிருக்கிறது. அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதி மக்களுக்கு போதுமானது அல்ல. அவர்களுக்கு ரூ.3000-லிருந்து ரூ.5000 வரை கொடுத்தால் மட்டுமே விவசாயிகள் பிழைக்க முடியும்.

அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதி மக்களுக்கு போதுமானது அல்ல. அவர்களுக்கு ரூ.3000-லிருந்து ரூ.5000 வரை கொடுக்க வேண்டும் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Previous articleபணி மாறுதலில் சென்றவரை ‘சென்னை மாநகராட்சி துணை ஆணையர்’ என்று குறிப்பிட்ட அரசிதழ்
Next articleஉ.பி.யில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு: கைதாகிறார் டிக்கெட் பரிசோதகர்