Home இன்றைய செய்தி கள்ளக்காதலை தடையின்றி தொடர்வதற்காக இன்ஜினியரின் காலை வெட்டி முடமாக்க முயன்ற கொடூர மனைவி கைது: கள்ளக்காதலனும்...

கள்ளக்காதலை தடையின்றி தொடர்வதற்காக இன்ஜினியரின் காலை வெட்டி முடமாக்க முயன்ற கொடூர மனைவி கைது: கள்ளக்காதலனும் சிக்கினார்

4
0

மதுரை: வௌிநாட்டில் இருந்து திரும்பிய கணவரை, தனது கள்ளக்காதல் உறவை தடையின்றி தொடர்வதற்காக காலை வெட்டி முடமாக்க முயன்ற கொடூர மனைவியை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை திருப்பாலை ஜி.ஆர்.சகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(35). இன்ஜினியரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வைஷ்ணவிக்கும்(24) திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஆண்டுக்கு இரு முறை வெளிநாட்டில் இருந்து வந்து செல்வது வழக்கம். இதன்படி கடந்த மாதம் 27ம் தேதி, மதுரை வந்தார். இனிமேல் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லப் போவதில்லை என்று மனைவியிடம் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி மகளை பள்ளியில் விட்டு விட்டு டூவீலரில் வீடு திரும்பினார். அப்போது திருப்பாலை பொன்விழா நகர் அருகே டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர், செந்தில்குமாரை வழிமறித்து கீழே தள்ளி பட்டாக்கத்தியால் அவரது இடது காலை குறி வைத்து வெட்டினர். இதை தடுக்க முயன்ற போது செந்தில்குமாரின் கையிலும் வெட்டு விழுந்தது.  இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இதுகுறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். முதற்கட்டமாக சொத்து பிரச்னை தொடர்பாக சம்பவம் நடந்ததில் ஆட்களை வைத்து கொலை செய்ய முயற்சி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் விசாரணையில் சொத்துப்பிரச்னையால் இந்த சம்பவம் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கொலை முயற்சி சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என செந்தில்குமார் மனைவி வைஷ்ணவி வலியுறுத்தி வந்தார். கணவன் வெட்டுப்பட்டதற்காக அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இது போலீசாருக்கு சந்தேகத்தை வரவழைத்தது. இதையடுத்து மீண்டும் வைஷ்ணவியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.  அப்போது அவருக்கும், அவரது தாய் மாமா மகன், சிவகங்கையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரிந்தது. அவருடனான கள்ளத்தொடர்பை தடையின்றி தொடர வேண்டும் என்பதற்காக, கணவரின் காலை வெட்டி முடமாக்க வேண்டும் என வைஷ்ணவி முடிவு செய்துள்ளார். அதன்படி வெங்கடேஷ் மற்றும் கூலிப்படையாக சிவகங்கையை சேர்ந்த வாலிபரிடம் பேசியுள்ளார். இதற்கு ரூ.2 லட்சம் என பேசி முடிக்கப்பட்டது. இதற்காக தனது 11 பவுன் நகைகளை ரூ.2.50 லட்சத்திற்கு, சிவகங்கையில் உள்ள அடகு கடையில் வைஷ்ணவி அடகு வைத்துள்ளார்.  இதில் ரூ.2 லட்சத்தை கள்ளக்காதலனிடம் கொடுத்து, கணவரை வெட்ட ஏற்பாடு செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு வைஷ்ணவி மற்றும் வெங்கடேஷை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு, செந்தில்குமாரை கூலிப்படை மூலம் எரித்துக் கொலை செய்ய முயன்றதும், அதில் அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயத்துடன் தப்பி விட்டார் என்பதும் தற்போதைய விசாரணையில் போலீசாரிடம் இருவரும் தெரிவித்துள்ளனர்.

Previous articleபெரம்பூர் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ.89 லட்சம் ஹவாலா பணம் ஒப்படைப்பு
Next articleதிருநின்றவூர் தனியார் பள்ளியில் மாணவிகள், ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை: நிர்வாகி வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு