Home இந்தியா ‘இணைந்து நடந்தால் வலிமை அதிகம்..’ – இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா  

‘இணைந்து நடந்தால் வலிமை அதிகம்..’ – இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா  

6
0

இந்தூர்: இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி இணைந்து கொண்டார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டமர் 7ஆம் தேதி முதல் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் யாத்திரையை தொடங்கிய அவர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மஹாராச்டிரா மாநிலங்களில் யாத்திரையை முடித்து தற்போது மத்தியப் பிரதேசத்தில் யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா இணைந்து கொண்டார். அவருடன் அவரது கணவர் ராபர்ட் வத்ரா, மகன் ரைஹானும் இணைந்து கொண்டனர். இன்று யாத்திரையின் ஒருபகுதியாக சுதந்திரப் போராட்ட வீரரும் பழங்குடியின தலைவருமான தன்தியாபீ நினைவிடத்திற்கு செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து கார்கோன் செல்கின்றனர். ராகுல், பிரியங்கா நடைப்பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைந்து நடக்கும்போது வலிமை அதிகம் என்று பதிவிட்டுள்ளது.

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி இணைந்து கொண்டார்.

Previous articleகோவை: பகையாளியை கொல்ல ஆன்லைனில் வெடி பொருள் வாங்கிய ஆசாமி கைது – சிக்கியது எப்படி?!
Next articleமதுரை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 30-ம் தேதிக்கு ஒத்துவைப்பு