Home இன்றைய செய்தி விண்வெளி வீராங்கனை இலக்குடன் தென் ஆப்பிரிக்காவில் பயிற்சி பெற செல்லும் தேனி மாணவி

விண்வெளி வீராங்கனை இலக்குடன் தென் ஆப்பிரிக்காவில் பயிற்சி பெற செல்லும் தேனி மாணவி

9
0

தேனி: விண்வெளி வீராங்கனை ஆகவேண்டும் என்ற இலக்குடன் தேனியைச் சேர்ந்த மாணவி பொருளாதார நெருக்கடிக்கும் மத்தியிலும் வான்வெளியில் தடம் பதிக்கும் ஆர்வத்தில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக வரும் ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் பைலட் பயிற்சி பெற செல்கிறார்.

தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தாமோதரன் – அமுதா தம்பதியரின் ஒரே மகள் உதயகீர்த்திகா. பள்ளிப் பருவத்திலே இவருக்கு விண்வெளி வீராங்கனையாக ஆக வேண்டும் என்ற உந்துதல் இருந்துள்ளது. 10-ம் வகுப்பு படிக்கும்போது இஸ்ரோ சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் விண்வெளி ஆராய்ச்சியின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். இதன்மூலம் இஸ்ரோ மையத்தை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதேபோல் பிளஸ் 2 படிக்கும் போது நடந்த போட்டியிலும் வென்றதால் இஸ்ரோவிற்கு இரண்டாம் முறையாக சென்றார்.

விண்வெளி வீராங்கனை ஆகவேண்டும் என்ற இலக்குடன் தேனியைச் சேர்ந்த மாணவி பொருளாதார நெருக்கடிக்கும் மத்தியிலும் வான்வெளியில் தடம் பதிக்கும் ஆர்வத்தில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Previous articleNZ v IND: குறுக்கிட்ட மழை; சமனில் முடிந்த ஆட்டம்; ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடரை வென்ற இந்திய அணி!
Next articleமேகதாது அணை விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மீறுவதாக தமிழக அரசு விளக்க மனு