Home இன்றைய செய்தி ‘நாட்டுக்காக விளையாடுவதை பெருமையாக உணர்கிறேன்’ லயோனல் மெஸ்சி உருக்கம்

‘நாட்டுக்காக விளையாடுவதை பெருமையாக உணர்கிறேன்’ லயோனல் மெஸ்சி உருக்கம்

5
0

லூசால்: கத்தாரில் உள்ள லூசால் நகரில்  இன்று நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, சவுதி அரேபியாவை எதிர்த்து மோதவுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், உலகின் டாப் 3 கால்பந்து வீரர்களில் ஒருவருமான லயோனல் மெஸ்சி, தொடர்ச்சியாக 2006, 2010, 2014, 2018 மற்றும் 2022 என தனது 5வது உலகக்கோப்பை தொடரில் ஆடுகிறார். இதுவரை அவர் 19 உலகக்கோப்பை போட்டிகளில் ஆடியுள்ளார். இதில்  6 கோல்கள் அடித்துள்ளார். 5 கோல்களுக்கு துணையாக இருந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா, பைனலுக்கு முன்னேறியது. பைனலில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும் அந்த உலகக்கோப்பை தொடரின் சிறந்த வீரராக லயோனல் மெஸ்சி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கோல்டன் பால் விருது வழங்கப்பட்டது.5வது உலகக்கோப்பை தொடரில் ஆடவுள்ளது குறித்தும், தனது கால்பந்து வாழ்வு குறித்தும் லயோனல் மெஸ்சி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: நிறைய நினைவுகள்… நல்ல நினைவுகள்… நல்ல நினைவுகளாக இல்லாவிட்டாலும் கூட, அவற்றுடன்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நாட்டுக்காக விளையாடுவதை எப்போதுமே பெருமையாக உணர்கிறேன். நாளை (இன்று) மற்றுமொரு உலகக்கோப்பை தொடரை தொடங்க உள்ளோம். மிகுந்த விருப்பத்துடனும், துடிப்புடனும் விளையாடப் போகிறோம். அணியில் உள்ள அனைவருமே ஒன்றாக ஒருமித்த உணர்வுடன் உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleஉலக கோப்பையில் இன்று 4 போட்டிகள்; நள்ளிரவில் நடப்பு சாம்பியன் பிரான்சுடன் ஆஸ்திரேலியா மோதல்
Next articleஉலக கோப்பை கால்பந்து அமெரிக்கா-வேல்ஸ் அணி ஆட்டம்; டிரா செனகலை வீழ்த்தியது நெதர்லாந்து