Home இன்றைய செய்தி Power Rangers: பவர் ரேஞ்சர்ஸ் நடிகர் டேவிட் ஃபிராங்க் மரணம்; இறப்பின் காரணம் குறித்து போலீஸ்...

Power Rangers: பவர் ரேஞ்சர்ஸ் நடிகர் டேவிட் ஃபிராங்க் மரணம்; இறப்பின் காரணம் குறித்து போலீஸ் விசாரணை

7
0

குழந்தைகளின் நட்சத்திர உலகில் விரும்பி பார்க்கப்படுவது பவர் ரேஞ்சர்ஸ். பவர் ரேஞ்சர்ஸில் நடித்த புகழ்பெற்ற நடிகர் டேவிட் ஃபிராங்க் நேற்று (20.11.2022) காலமானார்.  பவர் ரேஞ்சர்ஸில் க்ரீன் ரேஞ்சராக நடித்தவர் டேவிட் ஃபிராங்க். இவர் 1993 முதல் 1996 வரை ‘மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்’ தொலைக்காட்சித் தொடரில் ஃபிராங்க், டாமி ஆலிவராக சுமார் 124 எபிசோடுகளில் நடித்திருக்கிறார். பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.  இவர் டேக்வாண்டோ, கராத்தே போன்ற தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றவர். 

இந்நிலையில் 49 வயதான டேவிட் ஃபிராங்க் தற்கொலை செய்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இறப்பின் காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

டேவிட் ஃபிராங்க்

இவரின் இறப்புக்கு பிரபலங்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்து  வருகின்றனர்.

அந்தவகையில் அவருடன் நடித்த  வால்டர் இ.ஜோன்ஸ், டேவிட் ஃபிராங்குடன் எடுத்த புகைப்படத்தைப்  பகிர்ந்துக் கொண்டு , “அவர் பலருக்கு உத்வேகமாக இருந்திருக்கிறார்.எங்கள் ரேஞ்சர்ஸ்  குடும்பத்தின் உறுப்பினரை இழந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நம்ப முடியவில்லை…. RIP ஜேசன் டேவிட் ஃபிராங்க்” என்று பதிவிட்டிருக்கிறார். வால்டர் இ.ஜோன்ஸைத் தொடர்ந்து டேவிட் ஃபிராங்கின் சக நடிகரான  Amy Jo Johnson- னும் சமூக வலைத்தளத்தில் தனது வருத்தத்தைத்  தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் நட்சத்திர உலகில் விரும்பி பார்க்கப்படுவது பவர் ரேஞ்சர்ஸ். பவர் ரேஞ்சர்ஸில் நடித்த புகழ்பெற்ற நடிகர் டேவிட் ஃபிராங்க் நேற்று (20.11.2022) காலமானார்.  பவர் ரேஞ்சர்ஸில் க்ரீன் ரேஞ்சராக நடித்தவர் டேவிட் ஃபிராங்க். இவர் 1993 முதல் 1996 வரை ‘மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்’ தொலைக்காட்சித் தொடரில் ஃபிராங்க், டாமி ஆலிவராக சுமார் 124 எபிசோடுகளில் நடித்திருக்கிறார். பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.  இவர் டேக்வாண்டோ, கராத்தே போன்ற தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றவர். 
இந்நிலையில் 49 வயதான டேவிட் ஃபிராங்க் தற்கொலை செய்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இறப்பின் காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
டேவிட் ஃபிராங்க் இவரின் இறப்புக்கு பிரபலங்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்து  வருகின்றனர்.
அந்தவகையில் அவருடன் நடித்த  வால்டர் இ.ஜோன்ஸ், டேவிட் ஃபிராங்குடன் எடுத்த புகைப்படத்தைப்  பகிர்ந்துக் கொண்டு , “அவர் பலருக்கு உத்வேகமாக இருந்திருக்கிறார்.எங்கள் ரேஞ்சர்ஸ்  குடும்பத்தின் உறுப்பினரை இழந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நம்ப முடியவில்லை…. RIP ஜேசன் டேவிட் ஃபிராங்க்” என்று பதிவிட்டிருக்கிறார். வால்டர் இ.ஜோன்ஸைத் தொடர்ந்து டேவிட் ஃபிராங்கின் சக நடிகரான  Amy Jo Johnson- னும் சமூக வலைத்தளத்தில் தனது வருத்தத்தைத்  தெரிவித்துள்ளார்.

Previous article2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை: அன்புமணி ராமதாஸ் பேட்டி
Next articleஆருர்தாஸ்: `அவர் கற்றுக்கொடுத்த வித்தைதான் என்னைக் காப்பாற்றுகிறது!’- எம்.எஸ்.பாஸ்கர் உருக்கம்