அண்ணாநகர்: சென்னை முகப்பேர் கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (28). இவர், காரப்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.டி கம்பெனியில் பணியாற்றுகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன், இவர், இரவு வேலையை முடித்துவிட்டு பைக்கில் நண்பர் பரத் (28) என்பவருடன் வீட்டுக்கு கிளம்பினார். வீட்டின் அருகே சென்ற போது, அங்கு போதையில் இருந்த சிலரிடம், ‘‘யார் நீங்கள், இந்த நேரத்தில் எங்கள் ஏரியாவில் என்ன செய்கிறீர்கள். உடனே கிளம்புங்கள்,’’ என தமிழரசன் கூறியுள்ளார். இதன்காரணமாக அவர்கள் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள், தமிழரசனை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்தினர். இதை பார்த்ததும் பயந்துபோன நண்பர் பரத் அங்கிருந்து தப்பிவிட்டார். இதன்பிறகு, அந்த கும்பல், ‘‘இனிமேல் எங்க ஏரியா என்று நீ சொல்லகூடாது’’ என்று தமிழரசனிடம் கூறியதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து பைக்கில் தப்பினர். அவ்வழியாக சென்ற சிலர், தமிழரசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்படி, நொளம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து, தமிழரசனை கத்தியால் குத்திய மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் முரளிகுமார் (28), சதீஷ்குமார் (22) ஆகியோரை நேற்று கைது செய்து, அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.