புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. நன்னடத்தைக் காரணமாக பேரறிவாளன் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். சட்டப்பிரிவு 142ன் கீழ், உச்ச நீதிமன்றம் தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்தது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.