Home இன்றைய செய்தி சில்லிபாயின்ட்…

சில்லிபாயின்ட்…

13
0

* நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறும் 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், விக்கெட் கீப்பர்/அதிரடி பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல வேண்டி இருப்பதால் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.* ஆண்டு இறுதி ஏடிபி ஒற்றையர் தரவரிசையில் முதல் முறையாக ஸ்பெயின் வீரர்கள் கார்லோஸ் அல்கராஸ், ரபேல் நடால் முறையே முதல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.* ஜார்க்கண்ட் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய டெல்லி அணி, விஜய் ஹசாரே டிராபி தொடரின் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது.* உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 52 கிலோ எடை பிரிவு காலிறுதியில் விளையாட இந்தியாவின் தேவிகா, 57 கிலோ எடை பிரிவு காலிறுதியில் விளையாட இந்திய வீராங்கனை பிரீத்தி தகுதி பெற்றுள்ளனர்.* இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள பாகிஸ்தான் அணியில் புதுமுக சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Previous article22.11.22 செவ்வாய்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 22 | இன்றைய ராசிபலன்
Next articleஏடிபி பைனல்ஸ 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்: பெடர் சாதனை சமன்