Home இன்றைய செய்தி யூகி விமர்சனம்: ஒரு கதையில் ஓராயிரம் ட்விஸ்ட்கள்; எப்படியிருக்கிறது இந்த மல்டிஸ்டாரர் சினிமா?

யூகி விமர்சனம்: ஒரு கதையில் ஓராயிரம் ட்விஸ்ட்கள்; எப்படியிருக்கிறது இந்த மல்டிஸ்டாரர் சினிமா?

10
0

காணாமல் போனவர், கடத்தப்பட்டவர், வாடகைத் தாய், கொலை, விபத்து, போலீஸ் அரசியல், சிலை கடத்தல் எனப் பல களங்களில் நம்மைக் கடைசிவரை யூகிக்க மட்டுமே வைத்து பயணித்தால் அதுதான் `யூகி’.

கர்ப்பமாக இருக்கும் ஆனந்தி, மர்மமான ஒரு காரில் ஏறிச் சென்று காணாமல் போகிறார். நட்டி தலைமையிலான ஒரு குழுவும், டிடெக்டிவ் நரேன் தலைமையில் கதிரை உள்ளடக்கிய ஒரு குழுவும் ஆனந்தியைத் தேடுகிறார்கள். ஆனந்தி யார், அவரை ஏன் இரண்டு குழுக்களும் தேடுகின்றன, சினிமா நட்சத்திரமான ஜான் விஜய் ஏன் கொல்லப்படுகிறார், அவருக்கும் ஆனந்திக்கும் என்ன தொடர்பு… எனப் பல கேள்விகளுக்கான பதிலைத் திகட்டத் திகட்டத் திருப்பங்களை வாரி இறைத்துச் சொல்கிறது இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘யூகி’.

யூகி விமர்சனம்

நரேன், கதிர், ஆனந்தி, நட்டி, ஜான் விஜய், வினோதினி வைத்தியநாதன், ஆத்மியா என அனைத்து கதாபாத்திரங்களுக்கான தேர்வும் கச்சிதம். தங்கள் பணியைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். ஜான் விஜய்யும், நட்டியும் தங்களுக்கே உரியப் பாணியில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தன் முதல் படத்திலேயே முக்கியத்துவம் வாய்ந்த இத்தனை கதாபாத்திரங்களைச் சரியான அளவில் சேர்த்து திரைக்கதை உருவாக்கியதற்கு மட்டும் அறிமுக இயக்குநர் ஜாக் ஹாரிஸுக்குப் பாராட்டுகள்.

முதல் காட்சியிலிருந்தே ஒரு த்ரில்லர் படத்துக்கான பரபரப்பு தொடங்கிவிடுகிறது. ஆனால், வாழை இலையில் ஊற்றிய பாயசம் போல ஓடும் ‘பரபர’ காட்சிகள் மனதில் எங்கும் ஒட்டவில்லை. ஆனந்திக்கான கதை, சிலை திருட்டு வழக்கு, பிரதாப் போத்தன் – நரேனுக்கு இடையேயான உறவு, ஆனந்தியை நட்டி தேடுவது, கதிர் – பவித்ராவுக்கும் இடையேயான காதல் (?), ஜான் விஜய்க்கான கதை, கதிர் – ஆனந்தி உறவு எனப் பல அடுக்குகளைத் திரைக்கதையில் கட்டி துபாய் புர்ஜ் கலிஃபா பில்டிங்கிற்கே சவால் விடுகிறார் இயக்குநர்.

இத்தனை கிளைக் கதைகள், கதாபாத்திரங்கள் நிறைந்திருப்பதால், யாரைப் பின்பற்றி படத்தில் பயணிப்பது எனக் குழப்பம் ஏற்படுகிறது. போதாக்குறைக்கு, ஒரு நிமிடத்துக்கு 66 ட்விஸ்ட்டுகள் எனத் தெளிய வைத்துத் தெளிய வைத்து அடித்திருக்கிறது திரைக்கதை. இதுதானா ட்விஸ்ட் எனச் சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து ட்விஸ்ட்டுகள் வந்து குவிந்துவிடுகின்றன.

யூகி விமர்சனம்

குற்றவாளியைத் தேடும் த்ரில்லர் படத்தில் பார்வையாளருடன் கண்ணாமூச்சி ஆடும் வகையில் திரைக்கதை அமைக்க வேண்டும். திரைக்கதை ஆசிரியரும் பார்வையாளரும் ஒரு விளையாட்டை விளையாட வேண்டும். அதுதான், பார்வையாளரைக் கதையுடன் ஒன்றச் செய்யும். பார்வையாளர்களைத் திசை திருப்புவதற்காக ஒன்றிரண்டு தந்திரக்காட்சிகளை (Red Herring) வைக்கலாம். ஆனால் படம் முழுக்க ஏமாற்றிக்கொண்டு மட்டுமே இருந்தால், படமே ஏமாற்றமாகத்தான் அமையும் என்பதை ‘யூகி’ இயக்குநர் உணராததுதான் சோகம். அதேபோல, லாஜிக் ஓட்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

கலகத் தலைவன் விமர்சனம்: கலகம் உண்டாக்குபவன், தடையின்றி நம் மனதில் தடம் பதிக்கிறானா?

இரண்டாம் பாதியில், ஆனந்தி வாடகைத் தாயாக ஆக்கப்படுகிறார். இதைப் படத்தின் மைய கருவாக அமைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு வாடகைத் தாயை எப்படித் தேர்ந்தெடுப்பார்கள், அதற்கான உடற் தகுதி, பரிசோதனைகள் என்னென்ன என எந்த அடிப்படைத் தகவல்களையும் திரைக்கதையில் பயன்படுத்தாமல் மேம்போக்காக இந்த விவகாரத்தைக் கையாண்டிருக்கிறார்கள். மைய கருவைத் திரைக்கதையில் அழுத்தமாக பொறுத்ததில் கூட ஏன் இவ்வளவு அலட்சியம்? அதேபோல, சி.பி.ஐ அதிகாரி ஏன் ஒரு மாநில அமைச்சரின் ஆணைகளுக்குக் கட்டுப்பட வேண்டும், அந்தச் சிலைகடத்தல் விவகாரம்தான் என்ன என்று பல கேள்விகள் பாதியிலேயே தொக்கி நிற்கின்றன.

யூகி விமர்சனம்

படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் ஓரளவிற்கு வலு சேர்க்கிறது. ரஜ்சின் ராஜின் இசையில் வரும் காதல் பாடல் திரைக்கதைக்கு ஸ்பீட் ப்ரேக்கராக இருந்தாலும், பரபர பின்னணி இசைக்கு மத்தியில் காதுகளுக்கு இதமாக இருக்கிறது.

இறுதிவரை `யூகி’க்க வைக்கும் ஒரு சுவாரஸ்யமான த்ரில்லரைக் கொடுக்கும் முயற்சி, குழப்பமான திரைக்கதையாலும் தேவையற்ற திருப்பங்களாலும் முனை மழுங்கிப் போயிருக்கிறது.
காணாமல் போனவர், கடத்தப்பட்டவர், வாடகைத் தாய், கொலை, விபத்து, போலீஸ் அரசியல், சிலை கடத்தல் எனப் பல களங்களில் நம்மைக் கடைசிவரை யூகிக்க மட்டுமே வைத்து பயணித்தால் அதுதான் `யூகி’.
கர்ப்பமாக இருக்கும் ஆனந்தி, மர்மமான ஒரு காரில் ஏறிச் சென்று காணாமல் போகிறார். நட்டி தலைமையிலான ஒரு குழுவும், டிடெக்டிவ் நரேன் தலைமையில் கதிரை உள்ளடக்கிய ஒரு குழுவும் ஆனந்தியைத் தேடுகிறார்கள். ஆனந்தி யார், அவரை ஏன் இரண்டு குழுக்களும் தேடுகின்றன, சினிமா நட்சத்திரமான ஜான் விஜய் ஏன் கொல்லப்படுகிறார், அவருக்கும் ஆனந்திக்கும் என்ன தொடர்பு… எனப் பல கேள்விகளுக்கான பதிலைத் திகட்டத் திகட்டத் திருப்பங்களை வாரி இறைத்துச் சொல்கிறது இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘யூகி’.
யூகி விமர்சனம்நரேன், கதிர், ஆனந்தி, நட்டி, ஜான் விஜய், வினோதினி வைத்தியநாதன், ஆத்மியா என அனைத்து கதாபாத்திரங்களுக்கான தேர்வும் கச்சிதம். தங்கள் பணியைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். ஜான் விஜய்யும், நட்டியும் தங்களுக்கே உரியப் பாணியில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தன் முதல் படத்திலேயே முக்கியத்துவம் வாய்ந்த இத்தனை கதாபாத்திரங்களைச் சரியான அளவில் சேர்த்து திரைக்கதை உருவாக்கியதற்கு மட்டும் அறிமுக இயக்குநர் ஜாக் ஹாரிஸுக்குப் பாராட்டுகள்.
முதல் காட்சியிலிருந்தே ஒரு த்ரில்லர் படத்துக்கான பரபரப்பு தொடங்கிவிடுகிறது. ஆனால், வாழை இலையில் ஊற்றிய பாயசம் போல ஓடும் ‘பரபர’ காட்சிகள் மனதில் எங்கும் ஒட்டவில்லை. ஆனந்திக்கான கதை, சிலை திருட்டு வழக்கு, பிரதாப் போத்தன் – நரேனுக்கு இடையேயான உறவு, ஆனந்தியை நட்டி தேடுவது, கதிர் – பவித்ராவுக்கும் இடையேயான காதல் (?), ஜான் விஜய்க்கான கதை, கதிர் – ஆனந்தி உறவு எனப் பல அடுக்குகளைத் திரைக்கதையில் கட்டி துபாய் புர்ஜ் கலிஃபா பில்டிங்கிற்கே சவால் விடுகிறார் இயக்குநர்.
இத்தனை கிளைக் கதைகள், கதாபாத்திரங்கள் நிறைந்திருப்பதால், யாரைப் பின்பற்றி படத்தில் பயணிப்பது எனக் குழப்பம் ஏற்படுகிறது. போதாக்குறைக்கு, ஒரு நிமிடத்துக்கு 66 ட்விஸ்ட்டுகள் எனத் தெளிய வைத்துத் தெளிய வைத்து அடித்திருக்கிறது திரைக்கதை. இதுதானா ட்விஸ்ட் எனச் சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து ட்விஸ்ட்டுகள் வந்து குவிந்துவிடுகின்றன.
யூகி விமர்சனம்குற்றவாளியைத் தேடும் த்ரில்லர் படத்தில் பார்வையாளருடன் கண்ணாமூச்சி ஆடும் வகையில் திரைக்கதை அமைக்க வேண்டும். திரைக்கதை ஆசிரியரும் பார்வையாளரும் ஒரு விளையாட்டை விளையாட வேண்டும். அதுதான், பார்வையாளரைக் கதையுடன் ஒன்றச் செய்யும். பார்வையாளர்களைத் திசை திருப்புவதற்காக ஒன்றிரண்டு தந்திரக்காட்சிகளை (Red Herring) வைக்கலாம். ஆனால் படம் முழுக்க ஏமாற்றிக்கொண்டு மட்டுமே இருந்தால், படமே ஏமாற்றமாகத்தான் அமையும் என்பதை ‘யூகி’ இயக்குநர் உணராததுதான் சோகம். அதேபோல, லாஜிக் ஓட்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் திரைக்கதை எழுதியிருக்கிறார்.
கலகத் தலைவன் விமர்சனம்: கலகம் உண்டாக்குபவன், தடையின்றி நம் மனதில் தடம் பதிக்கிறானா?இரண்டாம் பாதியில், ஆனந்தி வாடகைத் தாயாக ஆக்கப்படுகிறார். இதைப் படத்தின் மைய கருவாக அமைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு வாடகைத் தாயை எப்படித் தேர்ந்தெடுப்பார்கள், அதற்கான உடற் தகுதி, பரிசோதனைகள் என்னென்ன என எந்த அடிப்படைத் தகவல்களையும் திரைக்கதையில் பயன்படுத்தாமல் மேம்போக்காக இந்த விவகாரத்தைக் கையாண்டிருக்கிறார்கள். மைய கருவைத் திரைக்கதையில் அழுத்தமாக பொறுத்ததில் கூட ஏன் இவ்வளவு அலட்சியம்? அதேபோல, சி.பி.ஐ அதிகாரி ஏன் ஒரு மாநில அமைச்சரின் ஆணைகளுக்குக் கட்டுப்பட வேண்டும், அந்தச் சிலைகடத்தல் விவகாரம்தான் என்ன என்று பல கேள்விகள் பாதியிலேயே தொக்கி நிற்கின்றன.
யூகி விமர்சனம்படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் ஓரளவிற்கு வலு சேர்க்கிறது. ரஜ்சின் ராஜின் இசையில் வரும் காதல் பாடல் திரைக்கதைக்கு ஸ்பீட் ப்ரேக்கராக இருந்தாலும், பரபர பின்னணி இசைக்கு மத்தியில் காதுகளுக்கு இதமாக இருக்கிறது.
இறுதிவரை `யூகி’க்க வைக்கும் ஒரு சுவாரஸ்யமான த்ரில்லரைக் கொடுக்கும் முயற்சி, குழப்பமான திரைக்கதையாலும் தேவையற்ற திருப்பங்களாலும் முனை மழுங்கிப் போயிருக்கிறது.

Previous articleமலேசியாவில் இருந்து விமானம் மூலம் போலி பாஸ்போர்ட்டில் சென்னைக்கு வந்த வங்கதேச பயணி கைது
Next articleயூகி Review: திகட்டும் திருப்பங்களுடன் த்ரில் அனுபவம் தரும் முயற்சி