Home இன்றைய செய்தி நான் மிருகமாய் மாற Review: சசிகுமார் மட்டும்தான் மிருகமாய் மாறினாரா?

நான் மிருகமாய் மாற Review: சசிகுமார் மட்டும்தான் மிருகமாய் மாறினாரா?

4
0

ரவுடிக் கூட்டத்திடம் இருந்து குடும்பத்தைக் காக்க போராடும் ‘காமன்’ ஒருவனின் தற்காப்பு ஆட்டங்கள்தான் ‘நான் மிருகமாய் மாற’ படம். சவுண்ட் இன்ஜினியரான அண்ணன் பூமிநாதனை (சசிகுமார்) பிக்அப் செய்ய செல்லும் அவரது தம்பி, பாதி வழியில் ரவுடிகளால் பலியாக்கப்படுகிறார். தன் கண் முன்னே தம்பியை இழந்த வருத்தத்தில் செய்வதறியாது திகைக்கும் பூமிநாதன் பொறுமையிழந்து வேட்டைக்குத் தயாராகிறார். அந்த வேட்டையின் முடிவுகள் அவர் குடும்பத்தை குறியாக்க, காமன் மேன் ஒருவர் மிருகமாய் மாற, இறுதியில் பலிகேட்கும் கூலிப்படைக் கூட்டத்திடமிருந்து குடும்பத்தை காப்பாற்றினாரா? இல்லையா? – இதுதான் ‘நான் மிருகமாய் மாற’.

‘கழுகு’, ‘சவாலே சமாளி’, ‘கழுகு 2’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சத்ய சிவா இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். சாதாரண மனிதன் ஒருவன் தன் குடும்பத்தைக் காக்க எப்படி மிருகமாய் மாறுகிறான் என்ற கதைக்கருவை திரைக்கதையாக்கி இருக்கிறார். படத்தின் மையக் கதாபாத்திரம் அதனளவில் நிற்கவே தடுமாறிகிறது. நாயகன் சசிகுமார் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தில் பொருந்தப் போராடுகிறார். கோபத்துடன் எதிரியிடம் பேசுகையில் ‘உன்ன துண்டு துண்டா வெட்டிருவேன் டா’ என்ற ரீபிட் வசனத்தைத் தாண்டி ஆக்ரோஷம் காட்டும் முகபாவனைகள், அழுகை, விரக்தி, இயலாமை வெளிப்படுத்தும் இடங்களில் ஏதோ மிஸ்ஸிங்!.

ரவுடிக் கூட்டத்திடம் இருந்து குடும்பத்தைக் காக்க போராடும் ‘காமன்’ ஒருவனின் தற்காப்பு ஆட்டங்கள்தான் ‘நான் மிருகமாய் மாற’ படம்.

Previous articleதொடங்கும் திட்டங்களை கிடப்பில்போடும் சகாப்தம் மறைந்துவிட்டது – பிரதமர் நரேந்திர மோடி
Next article“இந்த புரஃபஷன்ல இயந்திரத்தனமாதான் இருக்கணும்; ஆனா..?!” – ஜனகராஜ் பேட்டி @1990