Home இன்றைய செய்தி ஜாமீனில் விடுதலையானார் சவுக்கு சங்கர்: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் ஆஜராக நிபந்தனை

ஜாமீனில் விடுதலையானார் சவுக்கு சங்கர்: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் ஆஜராக நிபந்தனை

4
0

மதுரை: ஜாமீனில் விடுதலையான யூடியூபர் சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்ற பதிவாளர் நிபந்தனை விதித்துள்ளார்.

நீதித்துறை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சென்னையை சேர்ந்த யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை 6 மாதம் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து சங்கர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சங்கருக்கு உயர் நீதிமன்ற கிளை வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாமீனில் விடுதலையான யூடியூபர் சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Previous articleதமிழகத்தில் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்
Next articleசிறையில் மசாஜ் சிகிச்சை | டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு பாஜக கண்டனம்