Home இன்றைய செய்தி “இது கனவல்ல…” – பொன்னியின் செல்வனின் ரூ.500 கோடி வசூல் குறித்து விக்ரம் வியப்பு

“இது கனவல்ல…” – பொன்னியின் செல்வனின் ரூ.500 கோடி வசூல் குறித்து விக்ரம் வியப்பு

5
0

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் வசூல் ரூ.500 கோடியை எட்டியுள்ளது குறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளியாக நிலையில், நடிகர் விக்ரம் அதனை ஷேர் செய்துள்ளார். ‘இது கனவல்ல என என்னிடம் யாராவது சொல்லுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை குவித்துள்ளது.

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் ரூ.500 கோடியை எட்டியுள்ளது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாக நிலையில், நடிகர் விக்ரம் அதனை ஷேர் செய்துள்ளார்.

Previous articleஉலகிலேயே முதன் முதலாக ‘செக்ஸ் ஒர்க்கர்’வார்த்தையை அறிமுகம் செய்த நடிகை மரணம்; பெண்ணியவாதிகள் கவலை
Next article“புதியவர்களுக்கு நல்வாய்ப்பாக அமையும்” – நியூஸி. தொடர் குறித்து பாண்டியா நம்பிக்கை