Home சினிமா இந்திய சினிமா “யாரிடமும் இருந்தும் நான் திருடவில்லை”- காட்டமாக பதிலளித்த அக்ஷய் குமார்

“யாரிடமும் இருந்தும் நான் திருடவில்லை”- காட்டமாக பதிலளித்த அக்ஷய் குமார்

10
0

பிரபல பாலிவுட்  நடிகர் அக்ஷய் குமார்  நடிப்பில் இந்த ஆண்டு, பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ், ரக்ஷா பந்தன், ராம் சேது, போன்ற படங்கள் திரையரங்கில் வெளியாகின. அவை எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

ஓ.டி.டி யில் வெளியான கட்புட்லி படமும் தோல்வியைத் தழுவி பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. தோல்விக்குக் காரணம் ஒரு வருடத்திற்கு பல படங்களில் நடிப்பதுதான் என்று கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில், ஹிந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் உச்சிமாநாடு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட  அவரிடம் ஏன் ஒரு வருடத்திற்கு இத்தனை படங்களில் நடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சரியான நேரத்தில் வேலை செய்வதில் என்ன தவறு இருக்கிறது சொல்லுங்கள். இங்கே யாராவது தங்கள் குழந்தைகளை ஏன் இவ்வளவு வேலை செய்கிறார்கள் என்று கேட்கிறார்களா? நான் என்ன தவறு செய்கிறேன் என்று எனக்கு புரியவில்லை.

அக்ஷய் குமார்

ஒரு வருடத்தில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் நடிப்பேன். படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடிப்பேன். யாரிடமும் இருந்தும் நான் திருடவில்லை. என்னுடைய வேலையை நான் செய்கிறேன். வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தால் யார் தான் செய்ய மாட்டார்கள்” என்று பேசியிருக்கிறார்.

மேலும் அவரது மகன் ஆரவ் குறித்து பேசிய அவர், “ஆரவிடம் படங்கள் பற்றி பேச விரும்புவேன். ஆனால் அவர்  அதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர் விரும்பிய வேலையை செய்ய விரும்புகிறார்” என்று  அக்ஷய் குமார் தெரிவித்திருக்கிறார்.     

பிரபல பாலிவுட்  நடிகர் அக்ஷய் குமார்  நடிப்பில் இந்த ஆண்டு, பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ், ரக்ஷா பந்தன், ராம் சேது, போன்ற படங்கள் திரையரங்கில் வெளியாகின. அவை எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
ஓ.டி.டி யில் வெளியான கட்புட்லி படமும் தோல்வியைத் தழுவி பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. தோல்விக்குக் காரணம் ஒரு வருடத்திற்கு பல படங்களில் நடிப்பதுதான் என்று கூறப்பட்டு வந்தது. 
இந்நிலையில், ஹிந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் உச்சிமாநாடு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட  அவரிடம் ஏன் ஒரு வருடத்திற்கு இத்தனை படங்களில் நடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சரியான நேரத்தில் வேலை செய்வதில் என்ன தவறு இருக்கிறது சொல்லுங்கள். இங்கே யாராவது தங்கள் குழந்தைகளை ஏன் இவ்வளவு வேலை செய்கிறார்கள் என்று கேட்கிறார்களா? நான் என்ன தவறு செய்கிறேன் என்று எனக்கு புரியவில்லை.
அக்ஷய் குமார்ஒரு வருடத்தில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் நடிப்பேன். படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடிப்பேன். யாரிடமும் இருந்தும் நான் திருடவில்லை. என்னுடைய வேலையை நான் செய்கிறேன். வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தால் யார் தான் செய்ய மாட்டார்கள்” என்று பேசியிருக்கிறார்.
மேலும் அவரது மகன் ஆரவ் குறித்து பேசிய அவர், “ஆரவிடம் படங்கள் பற்றி பேச விரும்புவேன். ஆனால் அவர்  அதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர் விரும்பிய வேலையை செய்ய விரும்புகிறார்” என்று  அக்ஷய் குமார் தெரிவித்திருக்கிறார்.     

Previous article“என் தந்தையை நேசிக்கிறேன்… ஆனால் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கப் போவதில்லை” – ட்ரம்ப் மகள்
Next articleகுழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது: ஐகோர்ட் கிளை கருத்து