Home சினிமா இந்திய சினிமா `அம்மாவின் அன்பை மதிப்பிடுவதை நிறுத்துங்கள்’ – ஐஸ்வர்யா ராய்க்கு ஆதரவாகக் குவிந்த கமென்ட்டுகள்

`அம்மாவின் அன்பை மதிப்பிடுவதை நிறுத்துங்கள்’ – ஐஸ்வர்யா ராய்க்கு ஆதரவாகக் குவிந்த கமென்ட்டுகள்

11
0

முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவருக்கு இன்று 11வது பிறந்தநாள். மகள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய் தனது மகளின் பிறந்தநாளையொட்டி நேற்று இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுக்கு உதட்டோடு உதடாக முத்தம் கொடுப்பது போன்று போன்று இடம் பெற்று இருக்கிறது.

கோப்புக்காட்சி

அதோடு அதில், எனது அன்பு… எனது வாழ்க்கை… ஐ லவ் யூ மை ஆராத்யா என்று குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ள புகைப்படத்தை சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒருவர், `இது இந்திய கலாசாரம் கிடையாது, வெட்கமாக இருக்கிறது!’ என்று புகைப்படத்தைப் பார்த்து குறிப்பிட்டுள்ளார்.

`மற்றொருவர் அளவில்லாத பொறுத்தமற்ற செயல்’ என்றும், `உங்களது மகள் மீது நீங்கள் அளவில்லா அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று தெரியும். ஆனால் இது மிகவும் அதிகமாக தெரிகிறது. நீங்கள் உலகில் செல்வாக்கு மிக்கவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது போன்ற பதிவுகள் சில ரசிகர்களை மோசமாக பாதிக்கும். உங்களால் இன்னும் நன்றாக செய்ய முடியும்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய்க்கு அவரின் ரசிகர்கள் சிலர் ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ஒரு ரசிகர் மகளுக்கு முத்தம் கொடுப்பதை, `லெஸ்பியன் ஜோடி என்று சொல்பவர்கள் அதற்காக வெட்கப்படவேண்டும்!’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகர், `அம்மாவின் அன்பை மதிப்பிடுவதை நிறுத்துங்கள் என்றும், அன்பு மற்றும் இருவருக்கும் இடையிலான பிணைப்பை ஏற்படுத்தக்கூடிய முத்தம் அது, மோசமாக விமர்சிப்பதை கைவிடுங்கள், அன்பைப் பரப்புங்கள், பாஸிட்டிவாக சிந்தியுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவருக்கு இன்று 11வது பிறந்தநாள். மகள் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய் தனது மகளின் பிறந்தநாளையொட்டி நேற்று இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுக்கு உதட்டோடு உதடாக முத்தம் கொடுப்பது போன்று போன்று இடம் பெற்று இருக்கிறது.
கோப்புக்காட்சிஅதோடு அதில், எனது அன்பு… எனது வாழ்க்கை… ஐ லவ் யூ மை ஆராத்யா என்று குறிப்பிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ள புகைப்படத்தை சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒருவர், `இது இந்திய கலாசாரம் கிடையாது, வெட்கமாக இருக்கிறது!’ என்று புகைப்படத்தைப் பார்த்து குறிப்பிட்டுள்ளார்.
`மற்றொருவர் அளவில்லாத பொறுத்தமற்ற செயல்’ என்றும், `உங்களது மகள் மீது நீங்கள் அளவில்லா அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று தெரியும். ஆனால் இது மிகவும் அதிகமாக தெரிகிறது. நீங்கள் உலகில் செல்வாக்கு மிக்கவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது போன்ற பதிவுகள் சில ரசிகர்களை மோசமாக பாதிக்கும். உங்களால் இன்னும் நன்றாக செய்ய முடியும்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ராய்க்கு அவரின் ரசிகர்கள் சிலர் ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ஒரு ரசிகர் மகளுக்கு முத்தம் கொடுப்பதை, `லெஸ்பியன் ஜோடி என்று சொல்பவர்கள் அதற்காக வெட்கப்படவேண்டும்!’ என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகர், `அம்மாவின் அன்பை மதிப்பிடுவதை நிறுத்துங்கள் என்றும், அன்பு மற்றும் இருவருக்கும் இடையிலான பிணைப்பை ஏற்படுத்தக்கூடிய முத்தம் அது, மோசமாக விமர்சிப்பதை கைவிடுங்கள், அன்பைப் பரப்புங்கள், பாஸிட்டிவாக சிந்தியுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகளத்தில் டொனால்ட் ட்ரம்ப்… `2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயார்’ என அறிவிப்பு!
Next articleசபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை இன்று மாலை திறப்பு; புதிய மேல்சாந்தி பொறுப்பேற்கிறார்!