Home இன்றைய செய்தி Miral Review: அடுக்கடுக்கான அமானுஷ்யங்கள்; ஆனால், அந்த ட்விஸ்ட்… மிரட்டுகிறதா பரத்தின் `மிரள்’?

Miral Review: அடுக்கடுக்கான அமானுஷ்யங்கள்; ஆனால், அந்த ட்விஸ்ட்… மிரட்டுகிறதா பரத்தின் `மிரள்’?

10
0

குடும்பத்துடன் சொந்த ஊரிலிருந்து காரில் திரும்பும் நாயகன் அமானுஷ்ய சக்திகளுடன் நடுவழியில் சிக்கித்தவித்தால் என்னவாகும்? இதுதான் `மிரள்’ ஒன்லைன்.

தன் கண்முன் காதல் கணவன் (பரத்) கொல்லப்படுவது போன்று கெட்ட கனவு கண்டு மிரண்டு போகிறார் மனைவி (வாணி போஜன்). ‘அப்படி ஒன்றும் நடக்காது’ என ஆறுதல் சொல்ளும் நாயகனை சுற்றி அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன. ஜாதக பொருத்தத்தில் பிரச்னை என மாமியார் சொல்ல குலதெய்வ கோயிலுக்கு படையல் வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் எனக் குடும்பத்துடன் ஊருக்குக் கிளம்புகிறார். வீட்டை மீறித் திருமணம் செய்த அவர்கள் ஊருக்குத் திரும்பியதும் என்ன நடக்கிறது, ஊரிலிருந்து திரும்பும்போது நிகழும் அமானுஷ்யங்களின் பின்னணி என்ன, வாணி போஜனுக்கு கெட்ட கனவுகள் வருவது ஏன்… என இரண்டு மணிநேர திகில் சினிமாவாக விரிகிறது ‘மிரள்’.

மிரள்

தமிழ் சினிமாவில் ஹாரர் காமெடி படங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தாலும், மிரளவைக்கும் காட்சிகளுடன் முழு நீள திகில் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அப்படியான திகில் படமாகத்தான் இதைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சக்திவேல். திகைப்பூட்டும் முதல் காட்சியிலேயே அதை அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்துவிடுகிறார் இயக்குநர். ஆனால், அது வெறும் கனவு எனும்போது தொடங்குகின்றன ஏமாற்றங்கள்.

Yashoda Review: ஆக்‌ஷன் அவதாரத்தில் சமந்தா; வாடகைத்தாய் சர்ச்சை கதை – இந்த `யசோதா’ ஈர்க்கிறாளா?

வெகு சில கதாபாத்திரங்கள் மட்டுமே இருக்கும் கதை. மொத்த படத்தையும் தாங்கிப்பிடிக்க வேண்டிய பொறுப்பு பரத்துக்கும் வாணி போஜனுக்கும். தங்கள் நடிப்பின் மூலம் பயத்தை அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றபெறுகிறார்கள். மாமனாராக வரும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் எந்தக் குறையும் இல்லை என்றாலும் அவரது கதாபாத்திர வடிவமைப்பில் செயற்கைத்தனம் வழிந்தோடுகிறது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ ராஜ்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மிரள்Parole Review: ராவான கதை, வித்தியாசமான திரைக்கதை யுக்தி – படமாக எப்படியிருக்கிறது `பரோல்’?

திகிலூட்டும் ‘Jump Scare’ காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, இசையமைப்பாளர் பிரசாத், எடிட்டர் கலைவாணன் என மூவரின் உழைப்பும் மிளிர்கிறது. இருந்தும் சுமாரான திரைக்கதையால் நம்மைச் சோதிக்கிறது படம். இரண்டாம் பாதியில் ‘என்னடா நடக்குது இங்க?!’ என்று ஒருகட்டத்தில் விரக்தியில் கதறத்தொடங்குவார் பரத். பார்வையாளர்களாக நமக்கும் அப்படித்தான் இருக்கிறது. சரியாக எந்தப் பின்னணியையும் நிறுவப்படாததால் ஏன், எதற்கு, எப்படி என எதுவும் புரியாமல் ஒவ்வொரு திகில் காட்சியையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கடப்பது பெரும் அயர்ச்சி. இறுதியில் இதெல்லாம் இதனால்தான் நடந்தது என சொல்லப்படும் காரணங்கள் ‘காதில் பூ சுற்றும்’ ராகம். அதனாலேயே, அதுவரை பார்த்த எதிலுமே அர்த்தமோ லாஜிக்கோ இல்லாமல் போய் விடுகிறது. பேப்பரில் நன்றாகத் தோன்றும் அந்த ட்விஸ்ட், இறுதியில் காட்சிப்படுத்தப்படும்போது அதன் வீரியத்தை இழந்து, இதுவரை அடுக்கிய புதிர்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது.

பயமுறுத்தவதில் மெனக்கெட்ட அளவுக்கு கதை, திரைக்கதையிலும் மெனக்கெட்டிருந்தால் உண்மையிலேயே மிரள வைத்திருக்கும் இந்த `மிரள்’!
குடும்பத்துடன் சொந்த ஊரிலிருந்து காரில் திரும்பும் நாயகன் அமானுஷ்ய சக்திகளுடன் நடுவழியில் சிக்கித்தவித்தால் என்னவாகும்? இதுதான் `மிரள்’ ஒன்லைன்.
தன் கண்முன் காதல் கணவன் (பரத்) கொல்லப்படுவது போன்று கெட்ட கனவு கண்டு மிரண்டு போகிறார் மனைவி (வாணி போஜன்). ‘அப்படி ஒன்றும் நடக்காது’ என ஆறுதல் சொல்ளும் நாயகனை சுற்றி அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன. ஜாதக பொருத்தத்தில் பிரச்னை என மாமியார் சொல்ல குலதெய்வ கோயிலுக்கு படையல் வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் எனக் குடும்பத்துடன் ஊருக்குக் கிளம்புகிறார். வீட்டை மீறித் திருமணம் செய்த அவர்கள் ஊருக்குத் திரும்பியதும் என்ன நடக்கிறது, ஊரிலிருந்து திரும்பும்போது நிகழும் அமானுஷ்யங்களின் பின்னணி என்ன, வாணி போஜனுக்கு கெட்ட கனவுகள் வருவது ஏன்… என இரண்டு மணிநேர திகில் சினிமாவாக விரிகிறது ‘மிரள்’.
மிரள்தமிழ் சினிமாவில் ஹாரர் காமெடி படங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தாலும், மிரளவைக்கும் காட்சிகளுடன் முழு நீள திகில் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அப்படியான திகில் படமாகத்தான் இதைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சக்திவேல். திகைப்பூட்டும் முதல் காட்சியிலேயே அதை அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்துவிடுகிறார் இயக்குநர். ஆனால், அது வெறும் கனவு எனும்போது தொடங்குகின்றன ஏமாற்றங்கள்.
Yashoda Review: ஆக்‌ஷன் அவதாரத்தில் சமந்தா; வாடகைத்தாய் சர்ச்சை கதை – இந்த `யசோதா’ ஈர்க்கிறாளா?வெகு சில கதாபாத்திரங்கள் மட்டுமே இருக்கும் கதை. மொத்த படத்தையும் தாங்கிப்பிடிக்க வேண்டிய பொறுப்பு பரத்துக்கும் வாணி போஜனுக்கும். தங்கள் நடிப்பின் மூலம் பயத்தை அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றபெறுகிறார்கள். மாமனாராக வரும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் எந்தக் குறையும் இல்லை என்றாலும் அவரது கதாபாத்திர வடிவமைப்பில் செயற்கைத்தனம் வழிந்தோடுகிறது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ ராஜ்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மிரள்Parole Review: ராவான கதை, வித்தியாசமான திரைக்கதை யுக்தி – படமாக எப்படியிருக்கிறது `பரோல்’?திகிலூட்டும் ‘Jump Scare’ காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, இசையமைப்பாளர் பிரசாத், எடிட்டர் கலைவாணன் என மூவரின் உழைப்பும் மிளிர்கிறது. இருந்தும் சுமாரான திரைக்கதையால் நம்மைச் சோதிக்கிறது படம். இரண்டாம் பாதியில் ‘என்னடா நடக்குது இங்க?!’ என்று ஒருகட்டத்தில் விரக்தியில் கதறத்தொடங்குவார் பரத். பார்வையாளர்களாக நமக்கும் அப்படித்தான் இருக்கிறது. சரியாக எந்தப் பின்னணியையும் நிறுவப்படாததால் ஏன், எதற்கு, எப்படி என எதுவும் புரியாமல் ஒவ்வொரு திகில் காட்சியையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கடப்பது பெரும் அயர்ச்சி. இறுதியில் இதெல்லாம் இதனால்தான் நடந்தது என சொல்லப்படும் காரணங்கள் ‘காதில் பூ சுற்றும்’ ராகம். அதனாலேயே, அதுவரை பார்த்த எதிலுமே அர்த்தமோ லாஜிக்கோ இல்லாமல் போய் விடுகிறது. பேப்பரில் நன்றாகத் தோன்றும் அந்த ட்விஸ்ட், இறுதியில் காட்சிப்படுத்தப்படும்போது அதன் வீரியத்தை இழந்து, இதுவரை அடுக்கிய புதிர்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது.
பயமுறுத்தவதில் மெனக்கெட்ட அளவுக்கு கதை, திரைக்கதையிலும் மெனக்கெட்டிருந்தால் உண்மையிலேயே மிரள வைத்திருக்கும் இந்த `மிரள்’!

Previous article“பாம்பு சிறியதோ, பெரியதோ… விஷம் ஒன்றுதான்” – இந்துத்துவா குறித்து கண்ணய்யா குமார் கருத்து
Next article“சூரியனுக்கு அருகில் இருப்பது போல்…” – ரஜினியின் பாராட்டை சிலாகித்த பிரதீப் ரங்கநாதன்