Home சினிமா Oscars 2023: “விழாவைத் தொகுத்து வழங்க அழைக்கப்பட்டதைப் பெருமையாக கருதுகிறேன்!”- ஜிம்மி கிம்மெல்

Oscars 2023: “விழாவைத் தொகுத்து வழங்க அழைக்கப்பட்டதைப் பெருமையாக கருதுகிறேன்!”- ஜிம்மி கிம்மெல்

12
0

திரையுலகில் பிரபலமான விருதாகக் கருதப்படும் அகாடெமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி 1929 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைப்பெற்று வருகிறது.  அந்தவகையில் 95 -வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 12 ம் தேதி நடக்கவிருக்கிறது. கடந்த முறை ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை  கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார்.

ஆனால் அடுத்த வருடம் நடைபெறும் விருது விழாவைத் தொகுத்து வழங்க கிறிஸ் ராக்கிடம்  கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். காரணம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பெற்றார். அப்போது விருது வழங்கும் அந்நிகழ்ச்சியில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றித் தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கோபமடைந்த வில் ஸ்மித் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை மேடை ஏறி கன்னத்தில் அறைந்தார்.

கிறிஸ் ராக், வில்ஸ்மித்

இந்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன்பின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய கிறிஸ் ராக், “மீண்டும் ஆஸ்கர் விருதுக்குச் செல்வது என்பது ஒரு குற்றம் நடந்த இடத்திற்குத் செல்வது போன்றது” என்று கூறி அடுத்த வருடம் நடைபெறும் விருது விழாவைத் தொகுத்து வழங்க மறுத்திருந்தார்.

இந்நிலையில் அடுத்த வருடம் நடைப்பெறவுள்ள  95 -வது ஆஸ்கர் விருது வழங்கும்  விழாவை அமெரிக்காவைச் சேர்ந்த  ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்குகிறார். அமெரிக்க நடிகர் மற்றும் நகைச்சுவையாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், எழுத்தாளர், இயக்குநர் போன்ற பன்முகத் தன்மைகளைக் கொண்டவர்  ஜிம்மி கிம்மெல். இவர் ஏற்கெனவே 2017 மற்றும் 2018 ம் ஆண்டுகளில் இந்த விழாவைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். “மூன்றாவது முறையாக ஆஸ்கர்  விழாவைத் தொகுத்து வழங்க அழைக்கப்பட்டதைப் பெருமையாகக் கருதுகிறேன்” என்று ஜிம்மி கிம்மெல் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் பிரபலமான விருதாகக் கருதப்படும் அகாடெமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி 1929 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைப்பெற்று வருகிறது.  அந்தவகையில் 95 -வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 12 ம் தேதி நடக்கவிருக்கிறது. கடந்த முறை ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை  கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார்.
ஆனால் அடுத்த வருடம் நடைபெறும் விருது விழாவைத் தொகுத்து வழங்க கிறிஸ் ராக்கிடம்  கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். காரணம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பெற்றார். அப்போது விருது வழங்கும் அந்நிகழ்ச்சியில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றித் தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கோபமடைந்த வில் ஸ்மித் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை மேடை ஏறி கன்னத்தில் அறைந்தார்.
கிறிஸ் ராக், வில்ஸ்மித்இந்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன்பின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய கிறிஸ் ராக், “மீண்டும் ஆஸ்கர் விருதுக்குச் செல்வது என்பது ஒரு குற்றம் நடந்த இடத்திற்குத் செல்வது போன்றது” என்று கூறி அடுத்த வருடம் நடைபெறும் விருது விழாவைத் தொகுத்து வழங்க மறுத்திருந்தார்.
இந்நிலையில் அடுத்த வருடம் நடைப்பெறவுள்ள  95 -வது ஆஸ்கர் விருது வழங்கும்  விழாவை அமெரிக்காவைச் சேர்ந்த  ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்குகிறார். அமெரிக்க நடிகர் மற்றும் நகைச்சுவையாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், எழுத்தாளர், இயக்குநர் போன்ற பன்முகத் தன்மைகளைக் கொண்டவர்  ஜிம்மி கிம்மெல். இவர் ஏற்கெனவே 2017 மற்றும் 2018 ம் ஆண்டுகளில் இந்த விழாவைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். “மூன்றாவது முறையாக ஆஸ்கர்  விழாவைத் தொகுத்து வழங்க அழைக்கப்பட்டதைப் பெருமையாகக் கருதுகிறேன்” என்று ஜிம்மி கிம்மெல் தெரிவித்துள்ளார்.

Previous articleதேர்தல் பத்திர விற்பனையில் திருத்தம் | தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறது: மஹூவா மொய்த்ரா
Next articleடி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு