Home சினிமா சின்னத்திரை கணவர் அர்னவ் தாக்கியதாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகை திவ்யா ஸ்ரீதர்; என்ன நடந்தது?

கணவர் அர்னவ் தாக்கியதாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகை திவ்யா ஸ்ரீதர்; என்ன நடந்தது?

36
0

தாய்மை அடைந்திருப்பதை சமீபத்தில் சமூக ஊடகம் வழியே அறிவித்த சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், தனது கணவர் அர்னவ் தன்னைத் தாக்கியதாகப் போலீஸில் புகார் கொடுத்திருப்பதுடன் மருத்துவமனையிலும் அட்மிட் ஆகியிருக்கிறார்.

’கேளடி கண்மணி’, ‘மகராசி’ ஆகிய தொடர்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். ஏற்கெனவே திருமணமாகி மகள் இருக்கிற நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்திருந்தார். ‘கேளடி கண்மணி’யில் உடன் நடித்த அர்னவுடன் இவர் நெருங்கிப் பழகி வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்குமுன் தான் மீண்டும் கர்ப்பமடைந்திருப்பதை சோஷியல் மீடியாவில் அறிவித்தார். அர்னவுக்கும் திவ்யாவுக்கும் திருமணம் நடந்த விஷயமே அப்போதுதான் வெளியில் தெரிந்தது.

தற்போது அர்னவ் – திவ்யா இடையே பிரச்னை உண்டாகி திவ்யா மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் சூழலில், ’என்ன நடந்தது’ என அறிய அவரைத் தொடர்பு கொண்டோம். அவர் பேச முடியாத சூழலில் இருப்பதாகக் கூறிய அவரது வழக்கறிஞர் ப்ரியா நம்மிடம் பேசினார்.

திவ்யா ஸ்ரீதர்

“ரெண்டு பேரும் சில வருடங்களாக லிவின் ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்காங்க. தன்னைக் கல்யாணம் செய்துக்க திவ்யா கேட்டப்ப அதுக்கு நீ இஸ்லாம் மதத்துக்கு மாறணும்னு சொல்லி மதம் மாற வைத்திருக்கிறார் அர்னவ். ‘பதிலுக்கு நீங்களும் என் உணர்வுக்கு மதிப்பளிக்கறதுக்காக இந்து முறைப்படி என்னைக் கல்யாணம் செய்துக்கோங்க, நான் மாறுறேன்’ன்னு சொல்லியிருக்கார் திவ்யா. சரின்னு முதல்ல திருவேற்காடு கோயிலில் வச்சு இவங்க கல்யாணம் நடந்திருக்கு. பிறகு திவ்யா மதம் மாற, இஸ்லாமிய முறைப்படி நிக்காவும் செய்துக்கிட்டாங்க.

அதுவரை பிரச்னை இல்லை. ஆனா அதன் பிறகு அர்னவ் ‘செல்லம்மா’ சிரீயல்ல கமிட்டானதும், அந்த சீரியல்ல தன்னோட நடிச்ச நடிகை கூட நெருங்கிப் பழக ஆரம்பிச்சிருக்கார். அந்தப் பொண்ணு அர்னவ் சார்ந்த மதத்தைச் சேர்ந்தவராம். அர்னவின் அப்பாவும் அறந்தாங்கியில ஜமாத் பொறுப்புல இருக்கிறாராம். அவருக்கு அர்னவ் திவ்யாவைக் கல்யாணம் செய்துக்கிட்டது பிடிக்கலையாம்.

அதனால நாளாக ஆக அப்பா அம்மா பேச்சைக் கேட்டு திவ்யாவை ஒதுக்கத் தொடங்கி இருக்கிறார் அர்னவ். அதேநேரம் ‘செல்லம்மா’ சீரியலில் பழக்கமான நடிகையுடன் நெருக்கமா பழகி தனியே வீடு எடுத்துத் தங்கவும் செய்திருக்கிறார்.

திவ்யாவுக்கு அவங்க வீட்டு ஆதரவும் இல்லாத நிலையில கணவரும் ஒதுக்க, அவங்க மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்காங்க. அதனால தினசரி ரெண்டு பேருக்குமிடையில் சண்டை நடந்து அதோட தொடர்ச்சியாத்தான் கர்ப்பமா இருக்கறாங்கனு கூடப் பார்க்காம எட்டி உதைச்சிருக்கார் அர்னவ். இப்ப மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கிற டாக்டர்கள், திவ்யாவுக்கு அபார்ஷன் ஆனாலும் ஆகலாம்னு சொல்றாங்க.

நடந்த எல்லாத் தப்புக்கும் காரணம் அர்னவ். அதனால போலீஸ்லயும் புகார் கொடுத்திருக்கோம். போலீஸ் விசாரிச்சிட்டிருக்காங்க’’ என்கிறார் இவர்.

திவ்யா ஸ்ரீதர், அர்னவ்

அர்னவிடமும் நாம் பேசினோம். “என் கூட ‘செல்லம்மா’ சீரியல்ல நடிக்கிற நடிகையுடன் நான் நட்பா பழகுறேன், அவ்ளோதான். திவ்யா அந்த நட்பை சந்தேகப்படறாங்க. திவ்யாவுடன் வாழத்தான் ஆசைப்படுறேன். ஆனா மதம் கடந்து திருமணம் செய்திருப்பதால் வீட்டுப் பெரியவங்க கூடப் பேசி பொறுமையா விஷயத்தைச் சொல்லி அவங்களைச் சம்மதிக்க வைக்கலாம்னு சொன்னேன். ஆனா அதை திவ்யா கேட்கலை. சோஷியல் மீடியாவுல என்னைக் கேக்காமலே தகவலைத் தெரிவிச்சாங்க. அவங்களை சிலர் தப்பா வழி நடத்துறாங்க. நடிகர் ஈஸ்வர் எங்க குடும்ப விஷயத்துல தேவையில்லாம தலையிடுறார். அவர் மாதிரியான ஆட்களாலதான் பிரச்னை பெரிசாயிடுச்சு. சொல்லப் போனா திவ்யாதான் என்னையும் ‘செல்லம்மா’ சீரியல்ல என்னுடன் ஜோடியா நடிக்கிற அந்தப் பொண்ணையுமே கை நீட்டி அடிச்சிருக்காங்க. அதுக்கெல்லாம் எங்கிட்ட ஆதாரம் இருக்கு.

போலீஸ் விசாரணையில நடந்ததை எல்லாம் நானும் சொல்றேன். நேத்து நான் வீட்டுலயே இல்லை. அப்புறம் எப்படிங்க அடிக்க முடியும்” என்கிறார் இவர்.

போலீஸ் விசாரணை நடந்து வருகிற சூழலில் யார் பக்கம் நியாயம் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தாய்மை அடைந்திருப்பதை சமீபத்தில் சமூக ஊடகம் வழியே அறிவித்த சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், தனது கணவர் அர்னவ் தன்னைத் தாக்கியதாகப் போலீஸில் புகார் கொடுத்திருப்பதுடன் மருத்துவமனையிலும் அட்மிட் ஆகியிருக்கிறார்.
’கேளடி கண்மணி’, ‘மகராசி’ ஆகிய தொடர்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். ஏற்கெனவே திருமணமாகி மகள் இருக்கிற நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்திருந்தார். ‘கேளடி கண்மணி’யில் உடன் நடித்த அர்னவுடன் இவர் நெருங்கிப் பழகி வந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்குமுன் தான் மீண்டும் கர்ப்பமடைந்திருப்பதை சோஷியல் மீடியாவில் அறிவித்தார். அர்னவுக்கும் திவ்யாவுக்கும் திருமணம் நடந்த விஷயமே அப்போதுதான் வெளியில் தெரிந்தது.
தற்போது அர்னவ் – திவ்யா இடையே பிரச்னை உண்டாகி திவ்யா மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் சூழலில், ’என்ன நடந்தது’ என அறிய அவரைத் தொடர்பு கொண்டோம். அவர் பேச முடியாத சூழலில் இருப்பதாகக் கூறிய அவரது வழக்கறிஞர் ப்ரியா நம்மிடம் பேசினார்.
திவ்யா ஸ்ரீதர்”ரெண்டு பேரும் சில வருடங்களாக லிவின் ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்காங்க. தன்னைக் கல்யாணம் செய்துக்க திவ்யா கேட்டப்ப அதுக்கு நீ இஸ்லாம் மதத்துக்கு மாறணும்னு சொல்லி மதம் மாற வைத்திருக்கிறார் அர்னவ். ‘பதிலுக்கு நீங்களும் என் உணர்வுக்கு மதிப்பளிக்கறதுக்காக இந்து முறைப்படி என்னைக் கல்யாணம் செய்துக்கோங்க, நான் மாறுறேன்’ன்னு சொல்லியிருக்கார் திவ்யா. சரின்னு முதல்ல திருவேற்காடு கோயிலில் வச்சு இவங்க கல்யாணம் நடந்திருக்கு. பிறகு திவ்யா மதம் மாற, இஸ்லாமிய முறைப்படி நிக்காவும் செய்துக்கிட்டாங்க.
அதுவரை பிரச்னை இல்லை. ஆனா அதன் பிறகு அர்னவ் ‘செல்லம்மா’ சிரீயல்ல கமிட்டானதும், அந்த சீரியல்ல தன்னோட நடிச்ச நடிகை கூட நெருங்கிப் பழக ஆரம்பிச்சிருக்கார். அந்தப் பொண்ணு அர்னவ் சார்ந்த மதத்தைச் சேர்ந்தவராம். அர்னவின் அப்பாவும் அறந்தாங்கியில ஜமாத் பொறுப்புல இருக்கிறாராம். அவருக்கு அர்னவ் திவ்யாவைக் கல்யாணம் செய்துக்கிட்டது பிடிக்கலையாம்.
அதனால நாளாக ஆக அப்பா அம்மா பேச்சைக் கேட்டு திவ்யாவை ஒதுக்கத் தொடங்கி இருக்கிறார் அர்னவ். அதேநேரம் ‘செல்லம்மா’ சீரியலில் பழக்கமான நடிகையுடன் நெருக்கமா பழகி தனியே வீடு எடுத்துத் தங்கவும் செய்திருக்கிறார்.
திவ்யாவுக்கு அவங்க வீட்டு ஆதரவும் இல்லாத நிலையில கணவரும் ஒதுக்க, அவங்க மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்காங்க. அதனால தினசரி ரெண்டு பேருக்குமிடையில் சண்டை நடந்து அதோட தொடர்ச்சியாத்தான் கர்ப்பமா இருக்கறாங்கனு கூடப் பார்க்காம எட்டி உதைச்சிருக்கார் அர்னவ். இப்ப மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கிற டாக்டர்கள், திவ்யாவுக்கு அபார்ஷன் ஆனாலும் ஆகலாம்னு சொல்றாங்க.
நடந்த எல்லாத் தப்புக்கும் காரணம் அர்னவ். அதனால போலீஸ்லயும் புகார் கொடுத்திருக்கோம். போலீஸ் விசாரிச்சிட்டிருக்காங்க’’ என்கிறார் இவர்.
திவ்யா ஸ்ரீதர், அர்னவ்அர்னவிடமும் நாம் பேசினோம். “என் கூட ‘செல்லம்மா’ சீரியல்ல நடிக்கிற நடிகையுடன் நான் நட்பா பழகுறேன், அவ்ளோதான். திவ்யா அந்த நட்பை சந்தேகப்படறாங்க. திவ்யாவுடன் வாழத்தான் ஆசைப்படுறேன். ஆனா மதம் கடந்து திருமணம் செய்திருப்பதால் வீட்டுப் பெரியவங்க கூடப் பேசி பொறுமையா விஷயத்தைச் சொல்லி அவங்களைச் சம்மதிக்க வைக்கலாம்னு சொன்னேன். ஆனா அதை திவ்யா கேட்கலை. சோஷியல் மீடியாவுல என்னைக் கேக்காமலே தகவலைத் தெரிவிச்சாங்க. அவங்களை சிலர் தப்பா வழி நடத்துறாங்க. நடிகர் ஈஸ்வர் எங்க குடும்ப விஷயத்துல தேவையில்லாம தலையிடுறார். அவர் மாதிரியான ஆட்களாலதான் பிரச்னை பெரிசாயிடுச்சு. சொல்லப் போனா திவ்யாதான் என்னையும் ‘செல்லம்மா’ சீரியல்ல என்னுடன் ஜோடியா நடிக்கிற அந்தப் பொண்ணையுமே கை நீட்டி அடிச்சிருக்காங்க. அதுக்கெல்லாம் எங்கிட்ட ஆதாரம் இருக்கு.
போலீஸ் விசாரணையில நடந்ததை எல்லாம் நானும் சொல்றேன். நேத்து நான் வீட்டுலயே இல்லை. அப்புறம் எப்படிங்க அடிக்க முடியும்” என்கிறார் இவர்.
போலீஸ் விசாரணை நடந்து வருகிற சூழலில் யார் பக்கம் நியாயம் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Previous articleமும்பையில் ரூ.80 கோடி போதைப்பொருள் பறிமுதல்
Next article“மகாபாரதத்தை Lord of the Rings பாணியில் எடுத்தால் நான் நடிக்கத் தயார்!”- `ஆதிபுருஷ்’ சைஃப் அலி கான்