Home இந்தியா தேசிய விளையாட்டு போட்டி – குஜராத்தில் இன்று தொடக்கம்

தேசிய விளையாட்டு போட்டி – குஜராத்தில் இன்று தொடக்கம்

10
0

அகமதாபாத்: 36-வது தேசியவிளையாட்டுப் போட்டிகள் குஜராத்தில் இன்று தொடங்குகின்றன. வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். போட்டிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர் ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது.

சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு தேசிய விளையாட்டு போட்டி நடைபெறுவதால் இந்தத் தொடர் வீரர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியை இன்று மாலை 4.30 மணி அளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த விளையாட்டில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். மொத்தம் 36 விளையாட்டுகளில் போட்டி நடை பெறஉள்ளது. இதில் தடகள போட்டிகள் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 4 வரை காந்தி நகரில் நடத்தப்பட உள்ளது.

36-வது தேசியவிளையாட்டுப் போட்டிகள் குஜராத்தில் இன்று தொடங்குகின்றன. வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

Previous articleநீண்ட காலமாக மத்திய அமைப்புகளின் தீவிர கண்காணிப்பில் இருந்த பிஎஃப்ஐ
Next articleஇலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்