Home இந்தியா திருமலையில் ரூ.23 கோடியில் புதிய பரகாமணி கட்டிடம் – ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி...

திருமலையில் ரூ.23 கோடியில் புதிய பரகாமணி கட்டிடம் – ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார்

11
0

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா தற்போது திருமலையில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் நாளான்று, சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார். பின்னர், இரவு திருமலையில் தங்கிய அவர், நேற்று காலை மீண்டும் சுவாமியை தரிசனம் செய்தார். நேற்று காலை, திருமலையில் ரூ.23 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பரகாமணி கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.

தற்போது உண்டியல் காணிக்கை கோயிலுக்குள் எண்ணப்பட்டு வருகிறது. இதற்கென்று, கோயிலுக்கு வெளியே தனியாககட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்குநவீன சில்லறை எண்ணும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பணம் எண்ணுவதை வெளியில் இருந்து பக்தர்கள் காணும்வகையில் சுற்றிலும் கண்ணாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா தற்போது திருமலையில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில், முதல் நாளான்று, சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார்.

Previous articleஓர் இரவு சிறையில் தங்குவதற்கு உத்தராகண்ட்டில் ரூ.500 கட்டணம் – தோஷம் நீங்குவதற்கு பரிகாரம்
Next articleஈரோடு பேராசிரியர் மணியின் ‘இன்டர்நேஷனல் எக்னாமிக்ஸ்’ – பொருளாதார மாணவர்களுக்கு புதிய பாடநூல் வெளியீடு