Home மற்றவை க்ரைம் காதல் முறிவுக்கு காரணமாக இருந்ததாக கூறி கூலி தொழிலாளியை வெட்டிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

காதல் முறிவுக்கு காரணமாக இருந்ததாக கூறி கூலி தொழிலாளியை வெட்டிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

8
0

சென்னை: காதலியை பிரித்து பெற்றோரிடம் அனுப்ப காரணமாக இருந்ததாக கூறி, கூலி தொழிலாளியை வெட்டிய வாலிபருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொருக்குபேட்டையை சேர்ந்தவர் பிரபாகரன் (24), திருமணமானவர். இவர் தனது மனைவியுடன் மாதவரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி அங்கு கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் கொருக்குபேட்டையை சேர்ந்த கோடி (எ) கோட்டீஸ்வரன் (20) ஒரு பெண்ணை கூட்டிக்கொண்டு பிரபாகர் வீட்டுக்கு சென்றுள்ளார். அதை பார்த்த பிரபாகரன் யாரோ ஒரு பெண்ணை கூட்டி வந்து என் வீட்டில் தங்க வைப்பதால் எனக்கு சிக்கல் ஏற்படும் என்று கோட்டீஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கொருக்குபேட்டையில் உள்ள தனது தாய்க்கும் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, தகவல் தெரிந்த அந்த பெண்ணின் பெற்றோர் மகளை அழைத்து சென்று விட்டனர். இதனால், பிரபாகரன் தனது காதலை பிரித்துவிட்டார் என்று கோட்டீஸ்வரனுக்கு கோபம் ஏற்பட்டு அது விரோதமாக மாறியது. கடந்த 2016 ஆகஸ்ட் 17ம் தேதி கொருக்குபேட்டைக்கு தனது தாயை பார்க்க வந்த பிரபாகரனை கோட்டீஸ்வரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுதொடர்பாக பிரபாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டீஸ்வரன் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 5 பேர் சிறுவர்கள். இதையடுத்து, கோட்டீஸ்வரன் மீதான வழக்கு மட்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மாநகர அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் கோட்டீஸ்வரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Previous articleகச்சா எண்ணெய் முதுகை முறிக்கிறது: ஜெய்சங்கர் வேதனை
Next articleமதுரை | அரசு மருத்துவமனைக்கு ஒரு நாள் மருத்துவ சுற்றுலா – நோயாளிகளுடன் கல்லூரி மாணவிகள் ஆடிப்பாடி நெகிழ்ச்சி