Home சினிமா இளையராஜாவுடன் இசையிரவு 2 | ‘ஆறும் அது ஆழமில்ல’ – அழிக்க முடியாத காதல் நினைவலைகள்!

இளையராஜாவுடன் இசையிரவு 2 | ‘ஆறும் அது ஆழமில்ல’ – அழிக்க முடியாத காதல் நினைவலைகள்!

10
0

அடித்து பெய்த மழை சற்றே ஓய்ந்திருந்தாலும், மேற்கூரையின் வழியே சொட்டும் மழைத்துளியும், மரத்தின் இலைகள் உதிர்க்கும் தூறலும், கொசுறு போல் கொட்டிக் கொண்டிருந்த சாரல்களின் தூத்தலும் நின்றபாடில்லை. இத்தருணத்தில் இதமான ஒரு கதகதப்பை நம்மைப் போலவே நமது மனங்களும் தேடுகிறது. அக்கதகதப்பை பலருக்கு ஒரு கோப்பைத் தேநீரோ, ஒரு புத்தகமோ அல்லது ஒரு ரெட்ரோ பாடலோ உடனே தந்துவிடலாம்.

அந்த ரெட்ரோ காலத்து பாடல்களில் முந்தி வருபவை இளையராஜாவின் இசையாக இருப்பதற்கே சாத்தியங்கள் அதிகம். குளங்களின் மேல் பச்சைப்பட்டாடைப் போர்த்தியது போலவும், ஆளரவமற்ற இடங்களில் தொன்மையின் சுவடுகளாய் எஞ்சி நிற்கும் ஆளுயர மதில்களை இறுகப்பற்றி படர்ந்திருக்கும் பாசிகளைப் போலவும் அவரது இசையும்,பாடல்களும் பலரது மூளையின் மேற்புறத்தில் படர்ந்திருக்கின்றன.

அந்த ரெட்ரோ காலத்து பாடல்களில் முந்தி வருபவை இளையராஜாவின் இசையாக இருப்பதற்கே சாத்தியங்கள் அதிகம். அவரது இசையும்,பாடல்களும் பலரது மூளையின் மேற்புறத்தில் படர்ந்திருக்கின்றன. 

Previous articleIND vs SA | தென்னாப்பிரிக்காவை ஆட்டம் காண செய்த அரஷ்தீப், தீபக் சஹார்: இந்தியாவுக்கு 107 ரன்கள் இலக்கு
Next articleIND vs SA | சூர்யகுமார், கேஎல் ராகுல் அடுத்தடுத்து அரைசதம் – தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா