Home உலகம் Evening Post: ஈஷா..நீதிமன்றம் கேள்வி- ஜின்பிங் வீட்டுச் சிறையிலா?-6 திருமணங்கள் செய்த பெண்…

Evening Post: ஈஷா..நீதிமன்றம் கேள்வி- ஜின்பிங் வீட்டுச் சிறையிலா?-6 திருமணங்கள் செய்த பெண்…

6
0

ஈஷாவுக்கு விதி விலக்கு: மத்திய அரசின் விளக்கத்தினால் சர்ச்சை! 

ஈஷா மையம்

கோவையில் உள்ள கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சுற்றுசூழல் அனுமதி பெறவேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது.

வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோக மையத்தின் மீது வன ஆக்ரமிப்பு தொடர்பாக, தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்தது. யானையின் வழித்தடங்களை ஆக்ரமித்தது; அரசு நிலங்களை வளைத்தது; மலையில் இருந்து இறங்கி வரும் சிற்றோடையை ஆசிரமத்திற்குள் மடைமாற்றியது; இளம்பெண்களை சந்நியாசியாக மாற்றியது எனக் கடந்த 15 ஆண்டுகளாக ஈஷா பெயர் அவ்வப்போது சர்ச்சையில் அடிபட்டது உண்டு.

இன்னொரு பக்கம் ஆண்டுதோறும் அங்கு கோலாகலமாக கொண்டாடப்படும் மகாசிவராத்திரி கொண்டாட்டம் குறித்தும் சர்ச்சைகள் எழுவது உண்டு. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்ட ஆதி யோகி சிவன் சிலையையே, கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடிதான் திறந்து வைத்தார்.

‘காட்டு வளங்களை அழிக்கும் ஈஷா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கக் கூடாது’ என சூழல் ஆர்வலர்கள் அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடவும் செய்தனர். ஆனாலும், திட்டமிட்டபடி மோடி சிலையைத் திறந்து வைத்தார்.

இது குறித்து அப்போது முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன், ” விதிகளை மீறி 13 லட்சம் சதுர அடியை ஆக்கிரமித்து, ஈஷா யோகா மையம் கட்டடங்களை நிறுவியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, தொடர்ந்து அவர்கள் கட்டடங்களை எழுப்பி வருகின்றனர்” எனக் கூறியிருந்தார்.

அதேபோன்று சூழல் ஆர்வலர்கள், “மதம் சம்பந்தப்பட்ட நிறுவனமாக ஈஷா இல்லை எனக் கூறிவிட்டு, ‘மதம் சம்பந்தமான வழிபாட்டுத்தளம் அமைப்பதற்காக அனுமதி கோருகிறோம்’ என மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்துள்ளனர். 112 அடி உயர சிலை அமைப்பதற்கு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம், நகர ஊரமைப்புத் துறை ஆகியவற்றின் அனுமதியைப் பெறாமலேயே கட்டுமானங்களை எழுப்பியுள்ளனர்” எனக் குற்றம் சாட்டி இருந்தனர்.

” தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இக்கரை பொல்லுவ பட்டி எனும் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஈஷா அமைந்துள்ளது. 1994-ல் தொடங்கியபோது, 2913.34 சதுர அடி கட்டடங்களை மட்டுமே கட்டியிருந்தது. இப்போது 4 லட்சத்து 27 ஆயிரத்து 700 சதுர அடிக்கு கட்டடங்கள், பூங்காக்கள், விளையாட்டு இடங்கள், யோகா மண்டபங்கள், கார் நிறுத்தும் இடங்களை எழுப்பியுள்ளது.

இவற்றிற்கு மலைத்தளப் பாதுகாப்புக் குழுவின் ஒப்புதலையும் அவர்கள் பெறவில்லை. இந்தக் குழுவில் மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை வல்லுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் அனுமதிக்கு விண்ணப்பிக்காமல், உள்ளூர் ஊராட்சியின் ஒப்புதலை மட்டும் பெற்றிருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஈஷா வந்த பிறகுதான், யானைகளின் வாழ்விடத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டது” என்ற குற்றச்சாட்டுகளையும் அவர்கள் அப்போது முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில்தான், விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டு, ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கக்கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கிலே கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும் என்ற விதியில் இருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், ஈஷா அறக்கட்டளையின் கட்டடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில், சுற்றுச்சூழல் விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு ஆதரவாக மத்திய அரசின் விலக்கு அளிப்பது சரியா என்றும், ஈஷா அறக்கட்டளை எத்தகைய கல்வி நோக்கில் கட்டடங்களையும், மாணவர் விடுதிகளையும் கட்டி உள்ளது என்றும் சர்ச்சைகள் வெடித்துள்ளன.

“முன்னேற்றக் கழகத்துக்காரன்’ என்று ஈ.வெ.ரா குறிப்பிட்டது யாரை என்று ஆ.ராசா விளக்குவாரா?” – அண்ணாமலை

அண்ணாமலை

கோவையில் ஆளும் தி.மு.க அரசை கண்டித்து பா.ஜ.க கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. அதில் அண்ணாமலை கலந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்தும் கோவை கூட்டம் குறித்து தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ” தன்னுடைய கருத்தை, ஜனநாயக ரீதியில், பேச்சுரிமைக்கு உட்பட்டு, முகத்தில் அடித்தார் போல, உண்மைகளைப் பேசிய மாவட்ட தலைவரின் கைதுக்கு, எதிர்ப்பு தெரிவித்து, இத்தனை பெரிய கூட்டம் இதற்கு முன் கூடியதில்லை.

பெருகி வந்த மக்கள் பெருக்கம், இந்தக் கோட்டம் பா.ஜ.க-வின் கோட்டை என்று நிரூபிப்பதாக இருந்தது…”

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

புதுச்சேரி: ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி பந்த்! – அரசுப் பேருந்துகள் உடைப்பு; பதறிய பயணிகள்

உடைக்கப்பட்ட அரசு பேருந்து

ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது இந்து முன்னணி அமைப்பு.

மாணவர்களின் காலாண்டுத் தேர்வு பாதிக்கப்படும் என்றும், வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கோரிக்கைகள் எழுந்ததால், மாவட்ட ஆட்சியர் போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கோரிக்கை விடுத்தார்.

ஆனால் போராட்டத்தை வாபஸ் வாங்க முடியாது என்று இந்து முன்னணி அமைப்பு மறுத்துவிட்ட நிலையில்…

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘நிர்வாண வீடியோ… 6 திருமணங்கள்…’  கைதான பெண் வாக்குமூலம்! 

சந்தியா

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகில் உள்ள வெங்கரை அருகே இருக்கும் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால். இவருக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும், திருமண புரோக்கர் பாலமுருகன் என்பவர் மூலம் கடந்த 7-ம் தேதி, கொளக்காட்டுப்புதூர் அருகே உள்ள புதுவெங்கரை அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

இரண்டு நாள்கள் தனபாலோடு ‘குடித்தனம்’ நடத்திய சந்தியா, 9-ம் தேதி அதிகாலையில் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம்பிடித்தார். ‘சந்தியா ஓர் ஏமாற்று பேர்வழி’ என்பதை உணர்ந்த தனபால்…

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

‘வீட்டுச் சிறையில் ஜி ஜின்பிங்… சீனாவில் ராணுவ ஆட்சி?’ – உண்மையும் பின்னணியும்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்

டந்த சில தினங்களாகவே சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிவருகின்றன. அங்கு ராணுவப் புரட்சி ஏற்பட்டிருப்பதால், நாட்டின் முழுக் கட்டுப்பாடும் சீன ராணுவத் தளபதியிடம் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன.

இந்தச் செய்திகள் உண்மையா… சீன அதிபரின் நிலை என்ன? – விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

Deepti Sharma:’ஓயாத விவாதம்’ – தீப்தி சர்மா செய்த ரன் அவுட் முறையற்றதா?

Deepti

ரண்டு நாட்களுக்கு முன்பு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ரொம்பவே முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அனுபவமிக்க வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமியின் கடைசி போட்டி என்பதால் மட்டுமல்ல, அதைத் தாண்டியும் ஒரு முக்கியமான சம்பவத்தை தீப்தி சர்மா அந்தப் போட்டியில் செய்திருந்தார். அதுதான் இப்போது கிரிக்கெட் உலகில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக தீப்தி சர்மாவுக்கு எதிராக கருத்து கூறியிருப்பவர்களில் ஆண்டர்சன் மற்றும் ப்ராட் இருவரின் கருத்தும் ரொம்பவே முக்கியமானது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

Exclusive: மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம்; கதை, முக்கிய கதாபாத்திரம் குறித்த அப்டேட்!

மாரி செல்வராஜ்

தயநிதி ஸ்டாலினை வைத்து மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், மாரிசெல்வராஜ் தனது அடுத்தப் படத்திற்கு ரெடி ஆகிவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மாரி செல்வராஜின் சிறுவயதில் அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைத்தான் அடுத்த படமாக இயக்கவுள்ளார் என்கின்றனர். மைய கதாபாத்திரத்தில்…

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

ஈஷாவுக்கு விதி விலக்கு: மத்திய அரசின் விளக்கத்தினால் சர்ச்சை! 
ஈஷா மையம்கோவையில் உள்ள கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சுற்றுசூழல் அனுமதி பெறவேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது.
வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷா யோக மையத்தின் மீது வன ஆக்ரமிப்பு தொடர்பாக, தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்தது. யானையின் வழித்தடங்களை ஆக்ரமித்தது; அரசு நிலங்களை வளைத்தது; மலையில் இருந்து இறங்கி வரும் சிற்றோடையை ஆசிரமத்திற்குள் மடைமாற்றியது; இளம்பெண்களை சந்நியாசியாக மாற்றியது எனக் கடந்த 15 ஆண்டுகளாக ஈஷா பெயர் அவ்வப்போது சர்ச்சையில் அடிபட்டது உண்டு.
இன்னொரு பக்கம் ஆண்டுதோறும் அங்கு கோலாகலமாக கொண்டாடப்படும் மகாசிவராத்திரி கொண்டாட்டம் குறித்தும் சர்ச்சைகள் எழுவது உண்டு. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்ட ஆதி யோகி சிவன் சிலையையே, கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடிதான் திறந்து வைத்தார்.
‘காட்டு வளங்களை அழிக்கும் ஈஷா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கக் கூடாது’ என சூழல் ஆர்வலர்கள் அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடவும் செய்தனர். ஆனாலும், திட்டமிட்டபடி மோடி சிலையைத் திறந்து வைத்தார்.
இது குறித்து அப்போது முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன், ” விதிகளை மீறி 13 லட்சம் சதுர அடியை ஆக்கிரமித்து, ஈஷா யோகா மையம் கட்டடங்களை நிறுவியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, தொடர்ந்து அவர்கள் கட்டடங்களை எழுப்பி வருகின்றனர்” எனக் கூறியிருந்தார்.
அதேபோன்று சூழல் ஆர்வலர்கள், “மதம் சம்பந்தப்பட்ட நிறுவனமாக ஈஷா இல்லை எனக் கூறிவிட்டு, ‘மதம் சம்பந்தமான வழிபாட்டுத்தளம் அமைப்பதற்காக அனுமதி கோருகிறோம்’ என மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்துள்ளனர். 112 அடி உயர சிலை அமைப்பதற்கு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம், நகர ஊரமைப்புத் துறை ஆகியவற்றின் அனுமதியைப் பெறாமலேயே கட்டுமானங்களை எழுப்பியுள்ளனர்” எனக் குற்றம் சாட்டி இருந்தனர்.
” தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இக்கரை பொல்லுவ பட்டி எனும் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஈஷா அமைந்துள்ளது. 1994-ல் தொடங்கியபோது, 2913.34 சதுர அடி கட்டடங்களை மட்டுமே கட்டியிருந்தது. இப்போது 4 லட்சத்து 27 ஆயிரத்து 700 சதுர அடிக்கு கட்டடங்கள், பூங்காக்கள், விளையாட்டு இடங்கள், யோகா மண்டபங்கள், கார் நிறுத்தும் இடங்களை எழுப்பியுள்ளது.
இவற்றிற்கு மலைத்தளப் பாதுகாப்புக் குழுவின் ஒப்புதலையும் அவர்கள் பெறவில்லை. இந்தக் குழுவில் மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை வல்லுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் அனுமதிக்கு விண்ணப்பிக்காமல், உள்ளூர் ஊராட்சியின் ஒப்புதலை மட்டும் பெற்றிருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஈஷா வந்த பிறகுதான், யானைகளின் வாழ்விடத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டது” என்ற குற்றச்சாட்டுகளையும் அவர்கள் அப்போது முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில்தான், விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டு, ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கக்கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கிலே கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும் என்ற விதியில் இருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், ஈஷா அறக்கட்டளையின் கட்டடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில், சுற்றுச்சூழல் விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு ஆதரவாக மத்திய அரசின் விலக்கு அளிப்பது சரியா என்றும், ஈஷா அறக்கட்டளை எத்தகைய கல்வி நோக்கில் கட்டடங்களையும், மாணவர் விடுதிகளையும் கட்டி உள்ளது என்றும் சர்ச்சைகள் வெடித்துள்ளன.
“முன்னேற்றக் கழகத்துக்காரன்’ என்று ஈ.வெ.ரா குறிப்பிட்டது யாரை என்று ஆ.ராசா விளக்குவாரா?” – அண்ணாமலை
அண்ணாமலைகோவையில் ஆளும் தி.மு.க அரசை கண்டித்து பா.ஜ.க கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. அதில் அண்ணாமலை கலந்துகொண்டார்.
அதைத் தொடர்ந்தும் கோவை கூட்டம் குறித்து தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ” தன்னுடைய கருத்தை, ஜனநாயக ரீதியில், பேச்சுரிமைக்கு உட்பட்டு, முகத்தில் அடித்தார் போல, உண்மைகளைப் பேசிய மாவட்ட தலைவரின் கைதுக்கு, எதிர்ப்பு தெரிவித்து, இத்தனை பெரிய கூட்டம் இதற்கு முன் கூடியதில்லை.
பெருகி வந்த மக்கள் பெருக்கம், இந்தக் கோட்டம் பா.ஜ.க-வின் கோட்டை என்று நிரூபிப்பதாக இருந்தது…”
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
புதுச்சேரி: ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி பந்த்! – அரசுப் பேருந்துகள் உடைப்பு; பதறிய பயணிகள்
உடைக்கப்பட்ட அரசு பேருந்துஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது இந்து முன்னணி அமைப்பு.
மாணவர்களின் காலாண்டுத் தேர்வு பாதிக்கப்படும் என்றும், வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கோரிக்கைகள் எழுந்ததால், மாவட்ட ஆட்சியர் போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கோரிக்கை விடுத்தார்.
ஆனால் போராட்டத்தை வாபஸ் வாங்க முடியாது என்று இந்து முன்னணி அமைப்பு மறுத்துவிட்ட நிலையில்…
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க… ‘நிர்வாண வீடியோ… 6 திருமணங்கள்…’  கைதான பெண் வாக்குமூலம்! 
சந்தியாநாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகில் உள்ள வெங்கரை அருகே இருக்கும் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால். இவருக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும், திருமண புரோக்கர் பாலமுருகன் என்பவர் மூலம் கடந்த 7-ம் தேதி, கொளக்காட்டுப்புதூர் அருகே உள்ள புதுவெங்கரை அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
இரண்டு நாள்கள் தனபாலோடு ‘குடித்தனம்’ நடத்திய சந்தியா, 9-ம் தேதி அதிகாலையில் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம்பிடித்தார். ‘சந்தியா ஓர் ஏமாற்று பேர்வழி’ என்பதை உணர்ந்த தனபால்…
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
‘வீட்டுச் சிறையில் ஜி ஜின்பிங்… சீனாவில் ராணுவ ஆட்சி?’ – உண்மையும் பின்னணியும்!
சீன அதிபர் ஜி ஜின்பிங்கடந்த சில தினங்களாகவே சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிவருகின்றன. அங்கு ராணுவப் புரட்சி ஏற்பட்டிருப்பதால், நாட்டின் முழுக் கட்டுப்பாடும் சீன ராணுவத் தளபதியிடம் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் சொல்லப்படுகின்றன.
இந்தச் செய்திகள் உண்மையா… சீன அதிபரின் நிலை என்ன? – விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
Deepti Sharma:’ஓயாத விவாதம்’ – தீப்தி சர்மா செய்த ரன் அவுட் முறையற்றதா?
Deeptiஇரண்டு நாட்களுக்கு முன்பு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ரொம்பவே முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அனுபவமிக்க வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமியின் கடைசி போட்டி என்பதால் மட்டுமல்ல, அதைத் தாண்டியும் ஒரு முக்கியமான சம்பவத்தை தீப்தி சர்மா அந்தப் போட்டியில் செய்திருந்தார். அதுதான் இப்போது கிரிக்கெட் உலகில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக தீப்தி சர்மாவுக்கு எதிராக கருத்து கூறியிருப்பவர்களில் ஆண்டர்சன் மற்றும் ப்ராட் இருவரின் கருத்தும் ரொம்பவே முக்கியமானது.
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்… Exclusive: மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம்; கதை, முக்கிய கதாபாத்திரம் குறித்த அப்டேட்!
மாரி செல்வராஜ்உதயநிதி ஸ்டாலினை வைத்து மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், மாரிசெல்வராஜ் தனது அடுத்தப் படத்திற்கு ரெடி ஆகிவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மாரி செல்வராஜின் சிறுவயதில் அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைத்தான் அடுத்த படமாக இயக்கவுள்ளார் என்கின்றனர். மைய கதாபாத்திரத்தில்…
மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

Previous articleஎட்வர்டு ஸ்னோடனுக்கு குடியுரிமை வழங்கிய புதின்
Next articleஅக்.2-ல் அயோத்தியில் வெளியாகும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ டீசர்