Home தமிழகம் பிடிஆர் ஆதரவாளர் Vs கோ.தளபதி – மதுரை மாநகர் திமுக செயலாளர் யார்?

பிடிஆர் ஆதரவாளர் Vs கோ.தளபதி – மதுரை மாநகர் திமுக செயலாளர் யார்?

5
0

மதுரை: மதுரை மாநகர் திமுக செயலாளர் யார் என்பதில் எம்எல்ஏ கோ.தளபதிக்கும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவு பெற்ற அதலை செந்திலுக்கும் கடும் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. இது, திமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மதுரை புறநகர் வடக்கில் அமைச்சர் பி.மூர்த்தி, தெற்கில் எம்.மணிமாறன் ஆகியோர் மட்டுமே மனுக்களை தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. ஆனால், மதுரை மாநகர் செயலாளர் தேர்வில் கடும் போட்டியுடன் நாளுக்கு நாள் பரபரப்பு திருப்பங்களும் நடந்து வருவது கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் திமுக செயலாளர் யார் என்பதில் எம்எல்ஏ. கோ.தளபதிக்கும், அமைச்சர் பிடிஆர்.ஆதரவு பெற்ற அதலை செந்திலுக்கும் கடும் போட்டி உருவாகியுள்ளது. திமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Previous articleகள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு | விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைக்க மறுப்பதாக சிபிசிஐடி தகவல்
Next article“பாஜக வளர்வதைக் கண்டு பொறுக்க மாட்டாமல்…” – முதல்வர் ஸ்டாலின் மீது வானதி விமர்சனம்