Home இந்தியா “பாலியல் தொழிலின் கூடாரமாகவே இருந்தது” – உத்தராகண்ட் சொகுசு விடுதியின் முன்னாள் ஊழியர்கள் வாக்குமூலம்

“பாலியல் தொழிலின் கூடாரமாகவே இருந்தது” – உத்தராகண்ட் சொகுசு விடுதியின் முன்னாள் ஊழியர்கள் வாக்குமூலம்

12
0

டேராடூன்: உத்தராகண்ட் சொகுசு விடுதி ஒன்றில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்த அங்கிதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண்ணின் கொலை வழக்கில், அந்த விடுதியின் வேலை பார்த்த முன்னாள் ஊழியர்கள் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவராக இருந்தவர் வினோத் ஆர்யா. இவர் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார். இவரது மகன் புல்கிட் ஆர்யாவுக்கு ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இதில் வரவேற்பாளராக அங்கிதா பண்டாரி என்ற பெண்ணை கடந்த 18-ம் தேதி முதல் காணவில்லை என்று அங்கிதாவின் தந்தை, புல்கிட் ஆர்யா ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸாரின் விசாரணையில் அங்கிதாவை, புல்கிட் ஆர்யாதான் கொலை செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து புல்கிட் ஆர்யா உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அங்கிதாவின் உடலையும் போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

உத்தராகண்ட் சொகுசு விடுதி வரவேற்பாளராக வேலை பார்த்து வந்த அங்கிதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண்ணின் கொலை வழக்கில், அந்த விடுதியின் முன்னாள் ஊழியர்கள் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Previous articleராஜஸ்தான் காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம் | சச்சின் பைலட்டுக்கு தூதுவிடும் பாஜக
Next article12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியருக்கு போலீஸ் வலை