Home சினிமா திரை ஆளுமை ஆஷா பரேக்-கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு

திரை ஆளுமை ஆஷா பரேக்-கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு

6
0

புதுடெல்லி: பழம்பெறும் நடிகை ஆஷா பரேக், 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.

ஆஷா பரேக் இந்திய திரைப்படத் துறையில் அதிகம் கொண்டாடப்படும் திரைக் கலைஞர்களில் ஒருவராக அறியப்படுகிறார். ஆஷா பரேக் நடிப்பை, அவரது முக்கியமான படங்களான ஜாப் ப்யார் கிஸி சே ஹோட்டா ஹாய (1961), பிர் ஊஹி லயா ஹூன் (1963), டீஸ்ரீ மன்சில் (1966), பஹ்ரான் கே சாப்னே (1967), ப்யார் கா மவ்சம் (1969), மற்றும் காரவன் (1971) உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் திரைப்படங்களில் இந்தித் திரையுலகம் கண்டு மகிழ்ந்தது. முக்கியமாக 60கள், 70களில் பாலிவுட் ஹீரோவாக வலம்வந்த ஷமி கபூர் ஜோடியாக ஆஷா பரேக் தோன்றி நடித்த படங்களை ரசிகர்கள் மட்டுமல்ல, விமர்சகர்ளும் வெகுவாக ரசித்து வரவேற்றனர்.

பழம்பெறும் நடிகை ஆஷா பரேக், 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.

Previous articleபரமக்குடியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு: இளம்பெண் கைது
Next article“ஐஸ்வர்யா ராய் என் மனைவின்னு சொன்னதும், ராதிகாவோட ரியாக்‌ஷன்..!” – Sarath Kumar | Ponniyin Selvan