Home கல்வி பொறியியல் சேர்க்கை முதல் சுற்று கலந்தாய்வு – கட்டணம் செலுத்த இன்று கடைசி

பொறியியல் சேர்க்கை முதல் சுற்று கலந்தாய்வு – கட்டணம் செலுத்த இன்று கடைசி

9
0

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆக.20-ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 668 பேருக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்.10-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 12,294 மாணவர்கள் பங்கேற்றதில், 9,502 பேருக்கு மட்டுமே இடங்கள் உறுதி செய்யப்பட்டன. இதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 252 பேருக்கும், தொழிற்கல்வி பிரிவில் 953 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் சுற்றில் கல்லூரிகள் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை கடிதம் செப்.15-ம் தேதி இணையவழியில் வழங்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆக.20-ம் தேதி தொடங்கியது.

Previous articleரேஷன் அரிசி கடத்தல் – ஒரே வாரத்தில் 184 பேர் கைது
Next articleபின் இருக்கை சீட் பெல்ட்டுக்கும் அலாரம் கட்டாயம் வேண்டும் – மத்திய அரசு வரைவு விதிகள் வெளியீடு