Home இந்தியா பிஎஃப்ஐ அலுவலகம், நிர்வாகி வீடுகளில் என்ஐஏ சோதனை – நாடு முழுவதும் விடிய விடிய நடத்தப்பட்ட...

பிஎஃப்ஐ அலுவலகம், நிர்வாகி வீடுகளில் என்ஐஏ சோதனை – நாடு முழுவதும் விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்

5
0

புதுடெல்லி: தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ), இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய நடத்தப்பட்ட சோதனைக்குப் பின்னர், அமைப்பின் நிர்வாகிகள் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவில் செயல்பட்டு வந்த நேஷனல் டெவலப்மென்ட் பண்ட், கர்நாடகாவைச் சேர்ந்த கர்நாடக ஃபோரம் ஃபார் டிக்னிட்டி, தமிழகத்தை சேர்ந்த மனித நீதி பாசறை ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தொடங்கின.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ), இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Previous articleகருணாநிதி நட்டுவைத்த மகிழம் பூ – டிஜிபி அலுவலகத்தில் மரக்கன்று நட்டார் முதல்வர்
Next article‘ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது’ – மோகன் பாகவத் முஸ்லிம் தலைவரை சந்தித்த பின்னணியும் பேசியவையும்