Home இந்தியா கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பை இன்று வெளியிடுகிறது காங்கிரஸ் – 22 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல்

கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பை இன்று வெளியிடுகிறது காங்கிரஸ் – 22 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல்

8
0

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இதில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். ஜிதேந்திர பிரசாதா தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் சோனியா காந்தி மிக நீண்ட காலமாக இருந்து வந்தார். கடந்த 2017 முதல் 2019-ம் ஆண்டு வரை ராகுல் காந்தி தலைவராக இருந்தார்.

தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்ததால், தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா இருந்து வருகிறார். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவை என கோரிக்கை விடுத்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர். இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என காங்கிரஸ் மேலிடம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பை காங்கிரஸ் தேர்தல் குழு இன்று வெளியிடுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இதில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். ஜிதேந்திர பிரசாதா தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் சோனியா காந்தி மிக நீண்ட காலமாக இருந்து வந்தார்.

Previous articleகர்நாடகா | காங்கிரஸ் போஸ்டர் பிரசாரத்தால் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு நெருக்கடி
Next articleதிருப்பதி பிரம்மோற்சவ விழா – முதல்வர் ஜெகன் மோகனுக்கு அழைப்பு