Home சினிமா ஆஸ்கருக்கு அனுப்பப்படாத ‘ஆர்ஆர்ஆர்’ – பாஜக மீது கே.டி.ஆர் சரமாரி தாக்கு

ஆஸ்கருக்கு அனுப்பப்படாத ‘ஆர்ஆர்ஆர்’ – பாஜக மீது கே.டி.ஆர் சரமாரி தாக்கு

3
0

'தெலங்கானாவைச் சேர்ந்த எந்த ஒரு பிஜேபி ஜோக்கருக்கும் நம்முடையை உரிமையைக் கோரும் தைரியம் இல்லை' என தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ் விமர்சித்துள்ளார். ஆஸ்கருக்கு ‘ஆர்ஆர்ஆர்’ பரிந்துரைக்கப்படாததை முன்வைத்தே அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள 95-வது ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த வெளிநாட்டு மொழி படத்துக்கான பிரிவுக்கு இந்தியா சார்பில் குஜராத்தி படமான 'செலோ சோ ' (chhelloshow) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் என ரசிகர்களில் ஒரு தரப்பினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில், ரசிகர்கள் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளும், திரைவர்த்தகர்களும் தங்களின் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

‘தெலங்கானாவைச் சேர்ந்த எந்த ஒரு பிஜேபி ஜோக்கருக்கும் நம்முடையை உரிமையைக் கோரும் தைரியம் இல்லை’ என தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ் குற்றம் சாட்டியுள்ளார். 

Previous articleபூஜையுடன் தொடங்கிய தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படப் பணிகள்
Next articleபொன்னியின் செல்வன் பாடல் அனுபவம் 4 | காதோடு சொல் – ததும்பும் வானதி, குந்தவை நினைவலைகள்