Home உலகம் ஃபியோனா சூறாவளி முதல் கூந்தலை கொடியாக்கிய ஈரான் போராட்டம் வரை! – உலக செய்திகள் ரவுண்ட்அப்!

ஃபியோனா சூறாவளி முதல் கூந்தலை கொடியாக்கிய ஈரான் போராட்டம் வரை! – உலக செய்திகள் ரவுண்ட்அப்!

5
0

பியுர்ட்டோ ரிகோ தீவை உலுக்கிய ஃபியோனா சூறாவளி

அமெரிக்காவின் பியுர்ட்டோ ரிகோ என்ற தீவில் ஃபியோன்னா சூறாவளியால் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். மணிக்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த சூறாவளி தற்பொது கிழக்கு கனடாவை நோக்கி நகர்கிறது. இந்த சூறாவளியால் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தலைமுடியை வெட்டிக் கொடியாக மாற்றிய ஈரானியப் பெண்!

சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி 22 வயது மாசா அமினி எனும் பெண் கொல்லப்பட்டதால் இரானில் கலவரம் வெடித்துள்ளது. நாட்டில் உள்ள கடுமையான ஹிஜாப் சட்டங்களை எதிர்த்து தங்களின் ஹிஜாபை எரித்தும் தலை முடியை வெட்டியும் மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதில் தலைமுடியை வெட்டி கொடியாக மாற்றியுள்ள இந்தப் புகைப்படம் தற்போது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெல்ஜியத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி!

அத்தியாவசிய தேவைகளான மின்சாரம் , எரிவாயு மற்றும் உணவு பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பெல்ஜியம் தலைநகர் ப்ரஸ்ஸல்சில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றுள்ளனர். விலை உயர்வுக்கு ஏற்ப ஊதியங்கள் உயர்த்தப்படாததால் வாழ்வாதாரம் சிக்கலாகி உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய – உக்ரைன் போரால் நெருக்கடிக்கு உள்ளாகும் இத்தாலியின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

இத்தாலியில் ரஷ்யாவிற்கு சொந்தமான அந்நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது . ரஷ்ய- உக்ரைன் போரால் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தடைசெய்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்தும் முயற்சியில் ஃப்ரான்ஸ்!

மக்களிடையே சைக்கிள் ஓட்டும் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் 250 மில்லியன் யூரோக்களை ஒதுக்க ஃப்ரான்ஸ் அரசு திட்டமிட்ட்டுள்ளது. அதற்கான கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, பள்ளிகளிலும் இது குறித்து பாடங்கள் கற்பிக்க பட உள்ளது.

Previous article25 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார்: பெண் எழுத்தாளர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!
Next articleஎச்1 என்1 பரிசோதனையில் 1267 பேருக்கு இன்ஃப்ளூயென்சா காய்ச்சல் உறுதி