Home தமிழகம் விவசாய பணிகள் சுமூகமாக நடைபெற மானிய விலையில் போர்வெல் அமைக்க உதவ வேண்டும்-அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

விவசாய பணிகள் சுமூகமாக நடைபெற மானிய விலையில் போர்வெல் அமைக்க உதவ வேண்டும்-அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

7
0

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிணறு இல்லாதவர்களுக்கு போர்வெல் அமைத்து விவசாயம் செய்ய போர்வெல் அமைக்க மானியம் வழங்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பறுவ மழை பொயத்து, வறட்சி ஏற்பட்டு கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் பலர் கினறு பசானம் மூலம் விவசாயம் மேற்கொண்டனர். கடந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயம் நல்ல சாகுபடி கண்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மன்னர் காலத்தில் விவசாயிகள் மழையை மட்டுமே நம்பியிருந்தனர். அப்போது மழை பெய்தாலும் அந்த தண்ணீர் தேக்கி வைக்க குளங்கள் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களை வெட்டினர். இதன் மூலம் தற்போது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளது. இந்த குளங்கள் தற்போது பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளத்தில் தேங்கும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து விவசாய பொருட்களை உற்பத்தி செய்துவந்தனர். விவசாயம் நல்ல நிலையில் சென்று கொண்டு இருந்ததால் 1960களின் தொடக்கத்தில் சில வசதி படைத்த விவசாயிகள் கிணறுகள் வெட்ட தொடங்கினர். இப்படி படிப்படியாக கிணறு வெட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு முதல் 5 கிணறுகள் வெட்ட தொடங்கினர். இதனால் பல கிராமங்களில் மழையில்லாமல் இருந்தாலும் கிணற்றில் வரும் தண்ணீரை கொண்டு தொடர்ந்து விவசாயம் தொய்வு ஏற்படாமல் நடைபெற்றது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய உற்பத்தி தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. காலப்போக்கில் கால நிலை மாற்றத்தால் காலம் தவறி பெய்யும் மழை மற்றும் காட்டாறுகளில் தண்ணீர் இல்லாதது போன்ற காரணங்களால் நிலத்தடி நீர் மட்டும் அதளபாதாளத்திற்கு தென்று விட்டது. இதனால் விவசாயம் செய்வதில் தொய்வு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கிணறு வெட்டுவதை விட்டுவிட்டு போர்வெல் அமைக்க துவங்கினர். இதன்மூலம் பெறப்படும் தண்ணீரை கொண்டு தற்போது நெல், வாழை, சோளம், கம்பு, பூக்கள் சாகுபடி என பல்வேறு விவசாய பணிகளை மேற்கொள்கின்றனர்.தற்போது ஒரு சில கிணறுக்குள் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வருவதால் கிணறுக்குள் தண்ணீர் உள்ளது. கிணறு இல்லாத விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்ய போர்வெல் அமைக்க ஆர்வமாக உள்ளனர். விவசாயிகள் தங்கள் நிலங்களில் எந்த இடத்தில் நீரோட்டம் இருக்கிறதோ அந்த இடத்தில் போர்வெல்அமைக்க விவசாயிகள் முயற்சிசெய்கின்றனர்.ஒரு போர்வெல் அமைக்க கண்டிப்பாக ரூ.3 லட்சம் வரை செலவாகும். விவசாயிகள் தற்போது உள்ள நிலையில் இந்த தொகையை செலவு செய்ய முடியாது என்பது உண்மை. இதனால் தமிழக அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் போர்வெல் அமைக்க மாணியம் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: விவசாயம் செய்ய வேண்டும் என்று பல விவசாயிகள் அவர்களின் விவசாய நிலத்தில் நீரோட்டம் பார்த்து வருகின்றனர். நீரோட்டம் இருக்கும் இடத்தில் போர்வெல் அமைக்க எங்களிடம் போதிய நிதியில்லை. கடன் வாங்கினால் கண்டிப்பாக அதனை அடைக்க முடியாது. இதனால் தமிழக அரசு எங்களின் நிலையை கருத்தில் கொண்டு போர்வெல் அமைக்க சிறிப்பு திட்டத்தின் அடிப்படையில் மானியம் வழங்க தகுந்த நடவடிக்கை எடுத்து உதவ முன்வர வேண்டும் என்றனர்.

Previous articleஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மாடுகளுக்கு பெரிய அம்மை நோய் தாக்குதல்-தோல் கொப்புளங்கள், புண்களால் உயிரிழப்பு
Next articleசிறு தானியங்களுக்கு 50 சதவீத மானியத்தில் உயிர் உரங்கள்-தமிழக அரசின் திட்டத்திற்கு விவசாயிகளிடம் வரவேற்பு