Home தமிழகம் மாதா அமிர்தானந்தமயிக்குள் ஆன்மிக விதை தூவிய தாய் தமயந்தி அம்மா மறைவு!

மாதா அமிர்தானந்தமயிக்குள் ஆன்மிக விதை தூவிய தாய் தமயந்தி அம்மா மறைவு!

3
0

கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி பகுதியில் அமிர்தபுரியில் ஆசிரமம் அமைத்து பஜனை, சத்சங்கம், தியான நிகழ்ச்சி மூலம் ஆன்மிகத்தைப் பரப்பி வருகிறார் மாதா அமிர்தானந்தமயி. மாதா அமிர்தானந்தமயிக்கு உலகம் முழுவதும் பக்தர்களும், சீடர்களும் உள்ளனர்.

இவரின் அம்மா தமயந்தி. அப்பா இடமண்ணேல் சுகுணானந்தன். தந்தை சுகுணானந்தன் ஏற்கனவே மரணமடைந்துவிட்டார். மாதா அமிர்தானந்தயி தேவியின் தாய் தமயந்தி அம்மா அமிர்தபுரி ஆசிரமத்தின் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக சில ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் 97 வயதில் நேற்று முன் தினம் மரணமடைந்தார். முறைப்படி அவரது இறுதிச்சடங்குகள் நடந்தன. தன் மனதில் பக்தியையும், அன்பையும் விதைத்தவர் தனது தாய் தமயந்தி அம்மா என்று அடிக்கடி சொல்வார் மாதா அமிர்தானந்தமயி. சிறு வயதில் இருந்தே தன் தாய் அனைத்து விரதங்களையும் கடைபிடித்து வந்ததாகவும், அதிகாலையிலேயே எழுந்து ஹரிநாம கீர்த்தனம் போன்ற ஸ்லோகங்களைப் படிப்பார் என்றும் தன் தாய் குறித்து அமிர்தானந்தமயி முன்பு கூறியிருக்கிறார்.

தமயந்தி அம்மா மரணம்

ஆரம்ப காலத்தில் அமிர்தானந்தமயி வெளிப்படுத்திய ஆன்மிகச் சிந்தனைகளை யாராலும் அடையாளம் காண முடியவில்லை. இதனால், குழந்தையாக இருந்த மாதா அமிர்தானந்தமயி பல எதிர்ப்புகளுக்கு ஆளானார். அதேவேளை அமிர்தானந்தமயிக்கு அவரது தாயார் தமயந்தியம்மா முழு ஆதரவாக இருந்தார். மகளுக்கு என்ன நடக்கிறது என்று உணர்ந்துகொள்ள முடியாமல் இருந்தாலும், அந்த வலிகளைத் தாங்கிக்கொண்டு மகளுக்கு அருகில் உறுதுணையாக இருந்தார். அந்த நிலையில் தாய் தமயந்தி அம்மா தன்னைக் கட்டிப்பிடித்து அடிக்கடி கண்ணீர் விடுவார் என்றும் மாதா அமிர்தானந்தமயி முன்பு நேர்காணலில் கூறியிருந்தார்.

ஒரு நேர்காணலில், ‘தங்கள் குரு யார்’ என மாதா அமிர்தானந்தமயியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமிர்தானந்தமயி, “இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. அதனால் பிரபஞ்சம் முழுவதும் அம்மாவுக்கு குருதான். ஆனால், ஒரு நபர் எனத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் என் அம்மா தமயந்தி அம்மாதான் எனக்கு குரு” எனக் கூறியிருந்தார்.

தாய் தமயந்தி அம்மாவுடன் மாதா அமிர்தானந்தமயி

வேதாந்தமோ, ஆன்மிகமோ படித்து அறியாமல் இருந்தாலும் தமயந்தி அம்மா போன்றவர்களின் ஒவ்வொரு செயலிலும் அதைக் காணலாம் என்றும் அமிர்தானந்தமயி கூறுவதுண்டு. மாதா அமிர்தானந்தமயியாகத் தனது மகள் உலகம் முழுவதும் அறியப்பட்ட பிறகும் வெளி உலகில் அறியப்படாதவராக இருந்தார் தமயந்தி அம்மா. அனைத்து பக்தர்களையும்போல மாதா அமிர்தானந்தமயியை ‘அம்மா’ என்றே அழைத்துவந்தார் தமயந்தி அம்மா.

கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி பகுதியில் அமிர்தபுரியில் ஆசிரமம் அமைத்து பஜனை, சத்சங்கம், தியான நிகழ்ச்சி மூலம் ஆன்மிகத்தைப் பரப்பி வருகிறார் மாதா அமிர்தானந்தமயி. மாதா அமிர்தானந்தமயிக்கு உலகம் முழுவதும் பக்தர்களும், சீடர்களும் உள்ளனர்.
இவரின் அம்மா தமயந்தி. அப்பா இடமண்ணேல் சுகுணானந்தன். தந்தை சுகுணானந்தன் ஏற்கனவே மரணமடைந்துவிட்டார். மாதா அமிர்தானந்தயி தேவியின் தாய் தமயந்தி அம்மா அமிர்தபுரி ஆசிரமத்தின் அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக சில ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் 97 வயதில் நேற்று முன் தினம் மரணமடைந்தார். முறைப்படி அவரது இறுதிச்சடங்குகள் நடந்தன. தன் மனதில் பக்தியையும், அன்பையும் விதைத்தவர் தனது தாய் தமயந்தி அம்மா என்று அடிக்கடி சொல்வார் மாதா அமிர்தானந்தமயி. சிறு வயதில் இருந்தே தன் தாய் அனைத்து விரதங்களையும் கடைபிடித்து வந்ததாகவும், அதிகாலையிலேயே எழுந்து ஹரிநாம கீர்த்தனம் போன்ற ஸ்லோகங்களைப் படிப்பார் என்றும் தன் தாய் குறித்து அமிர்தானந்தமயி முன்பு கூறியிருக்கிறார்.
தமயந்தி அம்மா மரணம்ஆரம்ப காலத்தில் அமிர்தானந்தமயி வெளிப்படுத்திய ஆன்மிகச் சிந்தனைகளை யாராலும் அடையாளம் காண முடியவில்லை. இதனால், குழந்தையாக இருந்த மாதா அமிர்தானந்தமயி பல எதிர்ப்புகளுக்கு ஆளானார். அதேவேளை அமிர்தானந்தமயிக்கு அவரது தாயார் தமயந்தியம்மா முழு ஆதரவாக இருந்தார். மகளுக்கு என்ன நடக்கிறது என்று உணர்ந்துகொள்ள முடியாமல் இருந்தாலும், அந்த வலிகளைத் தாங்கிக்கொண்டு மகளுக்கு அருகில் உறுதுணையாக இருந்தார். அந்த நிலையில் தாய் தமயந்தி அம்மா தன்னைக் கட்டிப்பிடித்து அடிக்கடி கண்ணீர் விடுவார் என்றும் மாதா அமிர்தானந்தமயி முன்பு நேர்காணலில் கூறியிருந்தார்.
ஒரு நேர்காணலில், ‘தங்கள் குரு யார்’ என மாதா அமிர்தானந்தமயியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமிர்தானந்தமயி, “இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. அதனால் பிரபஞ்சம் முழுவதும் அம்மாவுக்கு குருதான். ஆனால், ஒரு நபர் எனத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் என் அம்மா தமயந்தி அம்மாதான் எனக்கு குரு” எனக் கூறியிருந்தார்.
தாய் தமயந்தி அம்மாவுடன் மாதா அமிர்தானந்தமயிவேதாந்தமோ, ஆன்மிகமோ படித்து அறியாமல் இருந்தாலும் தமயந்தி அம்மா போன்றவர்களின் ஒவ்வொரு செயலிலும் அதைக் காணலாம் என்றும் அமிர்தானந்தமயி கூறுவதுண்டு. மாதா அமிர்தானந்தமயியாகத் தனது மகள் உலகம் முழுவதும் அறியப்பட்ட பிறகும் வெளி உலகில் அறியப்படாதவராக இருந்தார் தமயந்தி அம்மா. அனைத்து பக்தர்களையும்போல மாதா அமிர்தானந்தமயியை ‘அம்மா’ என்றே அழைத்துவந்தார் தமயந்தி அம்மா.

Previous articleமதுரை: நடிகர் சூரி ஹோட்டலில் வணிகவரித்துறையினர் சோதனை!
Next articleமதுரை: 500 ஆண்டுகள் பழைமையான வளரி வீரனின் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு!