Home தமிழகம் தொடர்மழை எதிரொலி: தேன்கனிக்கோட்டை வனச்சரக நீர்நிலைகளில் குளித்து மகிழ கூட்டம் கூட்டமாக வரும் யானைகள்

தொடர்மழை எதிரொலி: தேன்கனிக்கோட்டை வனச்சரக நீர்நிலைகளில் குளித்து மகிழ கூட்டம் கூட்டமாக வரும் யானைகள்

5
0

ஓசூர்: நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை காலக்கட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அனைத்து ஏரிகளும், தண்ணீர் தொட்டிகளும் மழை நீரால் நிரம்பி வழிகின்றன. இந்த மழை நீரால் நிரம்பியுள்ள நீர் நிலைகளில் குளித்து மகிழ யானைகள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கி உள்ளன.

ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஜவளகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இந்த வனச்சரகங்களில் கடந்த 20 ஆண்டுகளாக கோடைகாலத்தில் கடுமையான வறட்சியும், அதைத் தொடர்ந்து தென் மேற்கு பருவமழை காலகட்டத்தில் மழை குறைவாகவும் பெய்வது வழக்கமான நிகழ்வாக இருந்து வந்தது. இதனால் நீர் நிலைகளை நாடி யானைகள் கிராமங்களுக்கு வருவதை தடுக்கும் வகையில் வனவிலங்குகளின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இங்குள்ள 7 வனச்சரகங்களிலும் தலா 10 குடிநீர் தொட்டிகளை தனியார் நிறுவனம் மற்றும் தொண்டு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் வனத்துறையினர் அமைத்துள்ளனர்.

நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை காலக்கட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அனைத்து ஏரிகளும், தண்ணீர் தொட்டிகளும் மழை நீரால் நிரம்பி வழிகின்றன

Previous articleபொதுக்குழு பிரமாணப் பத்திரங்களை மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் அளித்தோம்: சி.வி.சண்முகம் தகவல்
Next articleதமிழகத்தில் 448 சதுர கி.மீ பரப்பளவில் அமைகிறது இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம்