Home தமிழகம் தேனி அரசு மருத்துவமனையில் இளம் தாய் மரணத்துக்கு தவறான ஊசி செலுத்தியது காரணமா? – மருத்துவக்...

தேனி அரசு மருத்துவமனையில் இளம் தாய் மரணத்துக்கு தவறான ஊசி செலுத்தியது காரணமா? – மருத்துவக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவு

4
0

மதுரை: தேனி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட இளம்பெண் இறந்தது தொடர்பாக விசாரிக்க மருத்துவக் குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி கண்டமனூரைச் சேர்ந்த பூங்கொடி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''எனது மகள் கனிமொழியை பிரசவத்துக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தோம். அவருக்கு குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருந்தனர். ஜூன் 15-ல் மகளுக்கு தையல் பிரிக்கப்பட்டது. மறுநாள் என் மகளுக்கு பயிற்சி மருத்துவர் ஊசி ஒன்றை செலுத்தினார். அதன் பிறகு அவருக்க கடுமையான வலி ஏற்பட்டது. பின்னர் ஜூன் 21-ல் உயிரிழந்தார். என் மகள் இறப்புக்கான காரணத்தை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் பிரேதப் பரிசோதனை செய்யாமல் உடலை வாங்கிக் கொண்டு தகனம் செய்யுமாறு போலீஸார் எங்களை மிரட்டினர். இதனால் மகளின் உடலை பெற்றுக்கொண்டு சத்திரப்பட்டி மயானத்தில் அடக்கம் செய்தோம்.

தேனி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட இளம் பெண் இறந்தது தொடர்பாக விசாரிக்க மருத்துவக்குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Previous articleசிவகாசி மாநகராட்சியில் பயன்பாட்டுக்கு வராத ஆவின் பாலகங்கள்-திறந்து பால் விற்பனை செய்ய கோரிக்கை
Next articleதரகம்பட்டி அருகே அரசகவுண்டனூரில் பொது இடத்தில் ஆக்கிரமிப்பு ஆட்டுக்கொட்டகை அகற்றம்-அதிகாரிகள் அதிரடி