Home தமிழகம் தமிழகத்தில் முன்மாதிரியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 50 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் முகாம்

தமிழகத்தில் முன்மாதிரியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 50 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் முகாம்

4
0

* 2,500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை* தமிழக முதல்வருக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்பட்டுக்கோட்டை : தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது.முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன் (வட்டார ஊராட்சிகள்) கோவிந்தராஜன் (கிராம ஊராட்சிகள்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பழஞ்சூர், புதுக்கோட்டை உள்ளூர், பேராவூரணி தாலுக்காவிற்குட்பட்ட செருவாவிடுதி வடக்கு, தெற்கு, வாட்டாத்திக்கொல்லைக்காடு, கொளக்குடி, பெருமகளூர் உள்ளிட்ட பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தாலுகா பகுதிக்குட்பட்ட கிராமங்களிலிருந்து300-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.முகாமில் மனநல மருத்துவர் மங்கையற்கரசி, எலும்பு முறிவு மருத்துவர் கலைச்செல்வன், கண் மருத்துவர் வனசங்கரி, காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மருத்துவர் கலைமணி ஆகியோர் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை முழு பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான மருத்துவ ஒப்புதல் வழங்கினர்.முகாமில் மருத்துவர்களால் சான்று வழங்கப்பட்ட 80 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது. மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு உதவித் தொகைக்கு பதிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு 150 பேருக்கு பதிவு செய்யப்பட்டது. வருவாய்த்துறை உதவித்தொகை பெற 52 பேருக்கு பதிவு செய்யப்பட்டது. முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுக் தலைவர் பழனிவேல், நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் செல்வராஜ் ஆகியோர் 80 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினர்.முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் நரேஷ்குமார், ராஜசேகரன் மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம், மற்றும் டிசம்பர் 3 இயக்கத்தின் மாவட்ட, ஒன்றிய, மகளிரணி மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இது குறித்து முகாமில் கலந்து கொண்ட நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க மாவட்டத் தலைவர் பஹாத்முகமது கூறுகையில், எங்களது சங்கம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் முகாம் நடத்தி இன்றுடன் (நேற்று) பட்டுக்கோட்டையில் 50வது முகாம் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் முகாம் நடத்துவதன் அவசியம் மாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி கடைக்கோடியில் உள்ள அடையாள அட்டை பெற தகுதியுள்ள மாற்றுத்திறனாளியும் தேசிய அடையாள அட்டை பெற வேண்டும் என்ற ஒரு உயரிய நோக்கத்தில் தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு முன்மாதிரியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன் முறையாக 50 இடங்களில் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடந்த 3 மாதங்களில் நடந்தப்பட்ட 50 முகாம்களில் கடைக்கோடியில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் உள்பட சுமார் 2,500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்று பயனடைந்துள்ளனர்.இதற்கு காரணமாக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கும் ஒட்டு மொத்த மாற்றுத்திறனாளிகள் சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். உயரிய நோக்கத்தில்… தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 50 இடங்களில்  மாற்றுத்திறனாளிகள் முகாம் நடத்தி இன்றுடன்  (நேற்று) பட்டுக்கோட்டையில் 50வது முகாம் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு  இடங்களிலும் முகாம் நடத்துவதன் அவசியம் மாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி   கடைக்கோடியில் உள்ள அடையாள அட்டை பெற தகுதியுள்ள மாற்றுத்திறனாளியும் தேசிய  அடையாள அட்டை பெற வேண்டும் என்ற ஒரு உயரிய நோக்கத்தில் தமிழகத்தில் எந்த  மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு முன்மாதிரியாக தஞ்சாவூர் மாவட்டத்தில்  முதன் முறையாக 50 இடங்களில் முகாம் நடத்தப்பட்டுள்ளது.

Previous articleஎல்லப்பட்டி தடுப்பணைக்குள் தத்தளித்த வாலிபர் உயிருடன் மீட்பு-ஒரு மணி நேரம் திக்..திக்..
Next articleஆம்னி பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? – இணையத்தில் அறியும் எளிய வழி