Home தமிழகம் “டவுசரில் நூல் பிரிந்து பாவாடை ஆச்சு… தரமான சீருடை தாங்க” – கருத்துக்கேட்பில் அதிரவைத்த அரசுப்...

“டவுசரில் நூல் பிரிந்து பாவாடை ஆச்சு… தரமான சீருடை தாங்க” – கருத்துக்கேட்பில் அதிரவைத்த அரசுப் பள்ளி மாணவன்

4
0

மதுரை: “அரசு வழங்கிய சீருடை டவுசரில் நூல் பிரிந்து பாவாடை போல் ஆனது, இனிமேலாவது சீருடைய தரமான நூலில் தைத்துத் தரச் சொல்லுங்கள்” என மாநிலக் கல்விக் கொள்கை கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய அரசுப் பள்ளி 4-ம் வகுப்பு மாணவனின் பேச்சால் அரங்கமே அதிர்ந்தது.

மதுரையில் புதன்கிழமை மாநில கல்விக் கொள்கை குறித்து உயர்மட்டக்குழுவின் மண்டல அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் அக்குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற புதுடெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியுமான த.முருகேசன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர். கருத்துகள் கூறியவர்களில் முக்கிய கருத்துகள் விவரம்:

அரசு வழங்கிய சீருடை டவுசரில் நூல் பிரிந்து பாவாடைபோல் ஆனது, இனிமேலாவது சீருடைய தரமான நூலில் தைத்துத்தரச் சொல்லுங்கள் என மாநிலக்கல்விக் கொள்கை கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய அரசுப்பள்ளி 4-ம் வகுப்பு மாணவனின் பேச்சால் அரங்கமே அதிர்ந்தது.

Previous articleபாஞ்சாங்குளம் தீண்டாமை சம்பவம்: அறிக்கை அளிக்க ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் உத்தரவு
Next articleஆ.ராசாவுக்கு எதிராக பாஜக சார்பில் மக்களிடம் கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை தகவல்