Home தமிழகம் சென்னைக்கு புறப்பட்டபோது எஸ்ஐ பரிதாப சாவு

சென்னைக்கு புறப்பட்டபோது எஸ்ஐ பரிதாப சாவு

5
0

சின்னசேலம்: சென்னைக்கு வேலை விஷயமாக கிளம்பியபோது எஸ்ஐ பரிதாபமாக இறந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்தவர் சுப்பிரமணியன் (59). இவரது சொந்த ஊர் சங்கராபுரம். இவர் கரியாலூர் காவல் நிலைய வழக்கிற்காக உயர்நீதிமன்ற பணியின் காரணமாக சென்னை செல்வதற்காக, வழக்கிற்கான ஆவணங்களை எடுத்துக்கொண்டு நேற்று மதியம் காவல் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை வீட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டபோது கடும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Previous articleஐ.பி.எல் பாணியைப் பின்பற்றும் ஐ.சி.சி; புதிதாக அறிமுகப்படுத்தப்படும் விதிமுறைகள் என்னென்ன?
Next articleமயிலாடுதுறை அருகே கூடுதல் பேருந்து வசதி கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்