Home தமிழகம் சிவகாசி மாநகராட்சியில் பயன்பாட்டுக்கு வராத ஆவின் பாலகங்கள்-திறந்து பால் விற்பனை செய்ய கோரிக்கை

சிவகாசி மாநகராட்சியில் பயன்பாட்டுக்கு வராத ஆவின் பாலகங்கள்-திறந்து பால் விற்பனை செய்ய கோரிக்கை

5
0

சிவகாசி : சிவகாசி மாநகராட்சியில் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக்கிடக்கும் ஆவின் பாலகங்களை உடனடியாக திறந்து பால் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் ஆவின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும், ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் அனைத்து பொதுமக்களுக்கும் எளிய வகையில் சென்றடைய பல்வேறு அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு பூங்காக்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும், ஆவின் பாலகங்கள் அமைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனடிப்படையில், சிவகாசி பகுதியில் பஸ் ஸ்டாண்ட், மாரியம்மன் கோயில் பகுதி, காரனேசன் பஸ் ஸ்டாப், ஏஜே கல்லூரி பஸ் ஸ்டாப், இரட்டை பாலம் பகுதி உட்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஆவின் பாலகங்கள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், எம்எல்ஏ அலுவலகம், ஹவுசிங் போர்டு, காமராஜர் சிலை பகுதி, பழைய விருதுநகர் ரோடு, திருத்தங்கல் புதிய பஸ்டாண்ட், வடமலாபுரம் பஸ் ஸ்டாப், இபி அலுவலகம் பகுதி உட்பட 8 இடங்களில் ஆவின் பால் விற்பனை கடைகள் அமைக்கப்பட்டு, திறப்பு விழா காணாமல், கடந்த ஓராண்டுக்கு மேலாக பூட்டிக் கிடக்கின்றது.இந்த ஆவின் பாலகங்களை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம், சிவகாசி மாநகராட்சியில் ஆவின் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், அனைத்து பகுதிகளிலும் ஆவின் பால் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் பூட்டிக்கிடக்கும் ஆவின் பாலகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஆவின் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.ஆவின் பாலகங்களில் வடை, வாழைப்பழம் விற்பனை: சிவகாசி மாநகரில் கடை நடத்த இடம் கிடைப்பதே அரிதாக இருந்து வரும் நிலையில், ஆவின் மூலம் வழங்கப்பட்டுள்ள சில பாலகங்களை, அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், வேறு நபருக்கு ஒத்தி, மாத வாடகைக்கு விட்டு விடுகின்றனர். அதை லீசுக்கும் எடுக்கும் நபர்கள் டீ, வாழைப்பழம், பிஸ்கட், சிகரெட் விற்பனை செய்யும் பெட்டிக்கடையாக மாற்றிவிட்டனர். ஆவின் பால் கேட்டால் என்ன என்று கேட்கும் நிலையில் பாலகம் நடத்துவோர் செயல்பாடு உள்ளது. இப்படி இருந்தால், எப்படி ஆவின் பால் பாக்கெட் விற்பனையை அதிகரிக்க முடியும். அனைத்து ஆவின் பாலகத்திலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பால் கிடைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleஅரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதை மாவட்ட அதிகாரி திடீர் ஆய்வு-உணவு தயாரிப்பவர்களுக்கு ஆலோசனை
Next articleதேனி அரசு மருத்துவமனையில் இளம் தாய் மரணத்துக்கு தவறான ஊசி செலுத்தியது காரணமா? – மருத்துவக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவு