Home தமிழகம் சிறு தானியங்களுக்கு 50 சதவீத மானியத்தில் உயிர் உரங்கள்-தமிழக அரசின் திட்டத்திற்கு விவசாயிகளிடம் வரவேற்பு

சிறு தானியங்களுக்கு 50 சதவீத மானியத்தில் உயிர் உரங்கள்-தமிழக அரசின் திட்டத்திற்கு விவசாயிகளிடம் வரவேற்பு

5
0

மதுரை : தமிழக அரசின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மக்காச்சோளம், கம்பு, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களுக்கு சிறுதானிய நுண்ணுரம், உயிர் உரம் ஆகியவை 50 சதவீத மானியத்தில் வேளாண்துறை மூலம் வழங்கப்பட்டு வருவது, விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.தமிழகத்தின் பாரம்பரிய உணவு பெருமை கொண்ட சிறு தானியங்கள் மீதான வரவேற்பு சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்த சிறுதானியங்களில் உடலுக்கு வலிமை தரும் அத்தனை சத்துகளும் அடங்கி இருப்பதும், இதன் மீதான வரவேற்பை அதிகரித்துள்ளது. சிறுதானியங்களில் ஒன்றான மக்காச்சோளம் ஒரு முக்கியமான தானியப்பயிர். இதனை ‘தானியப்பயிர்களின் அரசி’ என்றும் அழைக்கின்றனர். மற்ற பயிர்களை ஒப்பிடும்போது, மக்காச்சோள சாகுபடிக்கான வேலையாட்களின் தேவை குறைவு, சாகுபடி செலவு, பூச்சி, நோய் தாக்குதலும் மிகக்குறைவு. அரிசி, கோதுமைக்கு அடுத்தப்படியாக மக்காச்சோளம் அதிகளவில் நம்மூரில் பயிரிடப்படுகிறது. அதிகளவில் விளைவிக்கப்படும் மக்காச்சோளம் உணவு தானியமாக, கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. அதிக விளைச்சல் காண சாகுபடி தொழில்நுட்பம் அவசியம். ஒரு எக்டருக்கு எந்தெந்த அளவுகளில் எந்த உரத்தை எந்த நேரத்தில் இடுவது என்பதை கவனித்து செய்தால் அதிக விளைச்சலை பார்க்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மதுரை வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் ராமசுப்பிரமணியன், கிருஷ்ணகுமார் கூறியதாவது: சிறுதானியங்களை முறையாக விளைவித்து, அதிக மகசூலை பெற முடியும். குறிப்பாக மக்காச்சோளத்தில் கார்போஹட்ரேட் 71.88 கிராம், புரோட்டின் 8.84 கிராம், கொழுப்பு 4.57 கிராம், நார்ச்சத்து 2.15 கிராம், பாஸ்போரஸ் 348 மில்லி கிராம், பொட்டாசியம் 286 மில்லி கிராம், கந்தகம் 114 மில்லி கிராம், தையமின் 0.40 மில்லி கிராம், ரைபோபிளாவின் 0.10 மில்லி கிராம், விட்டமின் சி 0.12 கிராம், அமினோ அமிலம் 1.78மில்லி கிராம் என்ற அளவில் உள்ளது. முதலில் நல்ல தரமான சான்று பெற்ற பூச்சி மற்றும் நோய் தக்காத விதைகளை விதைப்புக்கு தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். விதைகளை 3 மணிநேரம் நீரில் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி பின்னர் விதைப்பு செய்தால் விதைகள் நன்கு முளைப்பதோடு மட்டுமல்லாமல் குருத்துப்பூச்சி தாக்குதலும் குறையும். ஒரு செடிக்கும், மற்றொரு செடிக்கும் இடையே 25 செ.மீ இடைவெளியும், வரிசைக்கு வரிசை 60 செ.மீ இடைவெளியும் இருக்க வேண்டும். அடியுரமாக கால்பகுதி தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து மற்றும் பாதியளவு சாம்பல் சத்தை விதைப்பதற்கு முன்பு இடுதல் வேண்டும். கீழிருந்து 6 செ.மீ ஆழத்திற்கு குழியெடுத்து உரங்களை போட்டு 4 செ.மீ வரை மண் கொண்டு மூடுதல் வேண்டும். ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழுஉரம் அல்லது மக்கிய உரம், மக்கிய தென்னை நார்க்கழிவினை உழவின்போது நிலத்தில் சமமாக இடவேண்டும். அதனுடன் 10 பாக்கெட் (2000 கிராம் 1 எக்டருக்கு) அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தினை மண்ணில் இட்டு நன்கு உழவு செய்ய வேண்டும், மண் பரிசோதனைக்கேற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களை மண்ணில் இடவேண்டும் மண்ணில் உரங்களை இடும்போது மண்ணில் ஈரப்பதம் போதுமான அளவு இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு வேளாண்மை பல்கழைக்கழகத்தில் பரிந்துரைக்கப்பட்ட மக்காச்சோள மேக்சிம் ஒரு எக்டருக்கு தேவையான 3 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து பூக்கும் பருவத்திலும். மணி உருவாகும் பருவத்திலும் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். இதனால் மணி பிடிக்கும் திறன் அதிகரிக்கும். விளைச்சல் 20 சதம் கூடும். முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதலும், மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியைக் குறிக்கும். கதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்தவுடன் காய்ந்துவிடும். இப்பருவமே அறுவடைக்கு ஏற்றது. பல்வேறு நிலைகளிலும் அரசு வழங்கும் மானிய உதவிகளை, இதுபோன்ற சிறுதானியங்களின் விளைச்சலை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை விவசாயிகள் அறிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கூறினர்.இதுகறித்து விவசாயி கோவிந்தராஜன் கூறுகையில், ‘அதிக தண்ணீர் மற்றும் பராமரிப்பு தேவை இல்லை, உற்பத்தி செலவு மிகவும் குறைகிறது. அதிக உரம், பூச்சி மருந்து தேவைப்படாது. குறுகிய காலத்தில் அதிக மகசூல், கட்டுபடியான விலை என்பது போன்ற பல காரணங்களால் மக்காச்சோளம் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம். இந்நிலையில் சிறுதானியங்களை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மக்காச்சோளம், கம்பு, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களுக்கு சிறுதானிய நுண்ணுரம், உயிர் உரம் ஆகியவை 50 சதவீத மானியத்தில் வேளாண்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் செயல்பாட்டினை வரவேற்கிறோம்’ என்றார்.வாய்ப்புகளை வாரி வழங்கும் அரசுதமிழகம் முழுவதும் பாரம்பரிய சிறுதானிய வகைகளை பயிர் செய்வதற்கு தமிழக அரசு வேளாண்துறை மூலம் விவசாயிகளிடையே பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் குதிரைவாலி சாகுபடி மேற்கொள்வதற்கும் விதை பண்ணையம் அமைக்கவும் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பருவம் குதிரைவாலி சாகுப்படிக்கேற்ற பருவம். குதிரைவாலி சாகுபடியில் அதிக லாபம் அடைந்த விவசாயி உதயகுமார் கூறும்போது, ‘மதுரை 1 குதிரைவாலி ரகத்தினை 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துள்ளேன். குதிரைவாலி மதுரை 1 ரகமானது குறுகிய காலத்தில் அறுவடைக்கு தயராகி அதிக மகசூலும், நல்ல வருமானமும் கிடைகிறது. சான்றளிக்கப்பட்ட விதைகள், செயற்கை உரங்களை குறைத்து இயற்கை மற்றும் உயிர் உரங்களை வயல்களில் பயன்படுத்தினாலே பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இதற்கான வாய்ப்புகளையும் தமிழக அரசு வாரி வழங்கி வருகிறது’ என்றார்.

Previous articleவிவசாய பணிகள் சுமூகமாக நடைபெற மானிய விலையில் போர்வெல் அமைக்க உதவ வேண்டும்-அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
Next articleகாரியாபட்டியில் அண்ணா பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்-வாகன ஓட்டிகள், பயணிகள் கோரிக்கை