Home தமிழகம் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

4
0

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 22, 23-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

Previous articleபாஜக தான் எங்களின் மிகப்பெரிய எதிரி – லாலு பிரசாத் யாதவ் பேச்சு
Next articleவேலூரில் நாளை ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு