Home சினிமா “உடல் மாறலாம்… ஆர்வம் ஒருபோதும் மாறாது” – காஜல் அகர்வால் அனுபவப் பகிர்வு

“உடல் மாறலாம்… ஆர்வம் ஒருபோதும் மாறாது” – காஜல் அகர்வால் அனுபவப் பகிர்வு

3
0

'நம் உடல் மாறலாம்; ஆனால் நமக்குள் இருக்கும் ஆர்வமும் உத்வேகமும் ஒருபோதும் மாறாது' என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

குழந்தைப்பேறுக்கு பிறகான காலம் என்பது பெண்களுக்கு சவாலான நாட்கள்தான். காரணம், குழந்தைப்பேறுக்கு பிறகு அவர்களுக்கான உடல் முன்பிருந்தது போலல்லாமல் பல்வேறு மாற்றங்களை சந்தித்திருக்கும். அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் குழந்தைப்பேறுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு தன்னை தயாராக்கி கொண்டிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், படப்பிடிப்புக்கு தன்னை தயார் செய்துகொண்டிருக்கும் காஜல் அகர்வால் கடுமையான குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

‘நம் உடல் மாறலாம்; ஆனால் நமக்குள் இருக்கும் ஆர்வமும் உத்வேகமும் ஒருபோதும் மாறாது’ என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். 

Previous articleபொன்னியின் செல்வன் பாடல் அனுபவம் 3 | ராட்சஸ மாமனே – அழகால் ‘வதம்’ செய்யும் குந்தவை
Next articleசின்னத்தாயி: `கோட்டையைவிட்டு வேட்டைக்குப் போகும்’ – ஆணாதிக்க உலகின் அநியாயங்களைக் கேள்வி கேட்ட படம்!