Home உலகம் ஈரானில் பற்றியெரியும் ஹிஜாப்புக்கு எதிரான பெண்களின் போராட்டம்

ஈரானில் பற்றியெரியும் ஹிஜாப்புக்கு எதிரான பெண்களின் போராட்டம்

4
0

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் குழுவாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த நாட்டில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாடு முழுவதும் பொது இடங்களில் சோதனை நடத்தி ஹிஜாப் அணியாத பெண்கள், முஸ்லிம் முறைப்படி ஆடை அணியாத பெண்களை கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஒழுக்க நெறி பாடங்கள் கற்பிக்கப்படும்.

ஈரானில் ஹிஜாப்க்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. கட்டாய ஹிஜாப்க்கு எதிராக பெண்கள் குழுவாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Previous articleமாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டு திட்டம்: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்
Next articleபொன்னியின் செல்வன் பாடல் அனுபவம் 3 | ராட்சஸ மாமனே – அழகால் ‘வதம்’ செய்யும் குந்தவை