Home உலகம் இனி யாரும் பசியுடன் இருக்கக் கூடாது, இலவச ரொட்டி இயந்திரம் துபாய் முழுவதும் பொருத்தம்

இனி யாரும் பசியுடன் இருக்கக் கூடாது, இலவச ரொட்டி இயந்திரம் துபாய் முழுவதும் பொருத்தம்

3
0

துபாய் : இனி யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில்,   துபாய் முழுதும் ஆங்காங்கே இலவச ரொட்டி அளிக்கும் வெண்டிங் இயந்திரங்களை துபாய் அரசு நிறுவியுள்ளது.  ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர் கட்டட வேலை, கார் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், ‘டெலிவரி’ ஊழியர்களாக பணியாற்றுகின்றனர்.குடும்பத்தினருக்கு பணத்தை சேமிப்பதற்காக இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்றுவேளை சாப்பிடாமல் பட்டினியுடன் நாட்களை கழிக்கின்றனர்.இந்நிலையை மாற்ற வேண்டும் என, ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரதமர் ஷேக் முகமது பின் கடந்த ஆண்டு தெரிவித்தார்.இதன் ஒருபகுதியாக, துபாயில் இலவச உணவு அளிக்கும், ‘வெண்டிங் மிஷின்’ எனப்படும், தானியங்கி இயந்திரங்களை நகரின் பல்வேறு பகுதிகளிலும் அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது. இந்த உணவு இயந்திரங்கள் கடந்த 17ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன.துபாயின், ‘அஸ்வாக்’ மளிகை கடைகளின் வாயிலில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.இதில், அரபி ரொட்டி மற்றும், பிங்கர் ரோல் ஆகிய இரண்டு வகை உணவுகள், சுடச்சட தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச உணவு திட்டத்துக்கு தனிநபர்களும் நன்கொடை அளிக்கலாம் என துபாய் அரசு தெரிவித்துள்ளது.

Previous articleமியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு தகவல்!
Next articleபி.எம் கேர்ஸ் நிதி | பிரதமர் மோடி தலைமையிலான குழுவில் இணைந்த ரத்தன் டாடா, சுதா மூர்த்தி