Home தமிழகம் ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மாடுகளுக்கு பெரிய அம்மை நோய் தாக்குதல்-தோல் கொப்புளங்கள், புண்களால் உயிரிழப்பு

ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மாடுகளுக்கு பெரிய அம்மை நோய் தாக்குதல்-தோல் கொப்புளங்கள், புண்களால் உயிரிழப்பு

6
0

ஆம்பூர் : ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அம்மை நோய் போன்ற நோய் தாக்குதலால் மாடுகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பெரிய அம்மை நோயினால் நாடு முழுவதும் இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன. 16.5 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மிட்டாளம், பந்தேரபல்லி, வெங்கடசமுத்திரம், ராளகொத்தூர், துத்திப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாட்களாக மாடுகளுக்கு பெரிய அம்மை நோய் ஏற்பட்டு வருகிறது. ஒரு மாட்டில் இருந்து மற்றோர் மாட்டிற்கு விரைவாக பரவும் இந்த நோயால் தொடர்ந்து மாடுகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.இந்த நோய் பாதித்த மாடுகளுக்கு தோல், கழுத்து, கால் ஆகிய இடங்களில் சிறு சிறு கொப்புளங்கள் தோன்றுகின்றன. இந்த கொப்புளங்கள் 2 முதல் 3 நாட்களில் பெரியதாக உருமாறுகின்றன. பின்னர், இந்த கொப்புளங்கள் வெடித்து அவற்றில் இருந்து நீர் போன்ற திரவம் வடிய தொடங்கும் நிலையில், கொப்புளங்கள் புண்களாக மாறுகின்றன. இதனால், மாடுகள் சரியாக தீனி சாப்பிடாமல் இருப்பதாகவும், நோயின் தாக்கம் அதிகரித்து அவை இறக்க நேரிடுவதாகவும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், கால்நடை மேய்ப்போர் மற்றும் கறவை மாடுகள் வைத்திருப்போர் வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே, சம்பந்த பட்ட பகுதிகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் உரிய சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தி மாடுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.கசாப்பு கடைகளில் நோய் பாதித்த மாடுகள் பெரிய அம்மை நோய் பாதித்த மாடுகள் ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மாட்டிறைச்சி கடைகளுக்கு அதிகளவில் வர துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நோய் பாதித்த மாடுகள் சில நாட்களில் இறந்து விடக்கூடும் என்ற அச்சத்தினால் பலர் தங்களது மாடுகளை மிகவும் மலிவான விலைக்கு பல்வேறு மாட்டிறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் நோய் தொற்று பாதித்த மாட்டிறைச்சியை வாங்கி உண்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் நிலை உருவாகி உள்ளது. எனவே கசாப்பு கடைகளையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Previous articleஉசிலம்பட்டி அருகே தனியார் மில்லில் 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்-‘புஷ்பா’ பட பாணியில் டேங்கரில் கடத்த முயற்சி
Next articleவிவசாய பணிகள் சுமூகமாக நடைபெற மானிய விலையில் போர்வெல் அமைக்க உதவ வேண்டும்-அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை